Saturday, November 30, 2013

வாகன காப்பீடும் இதனை பயன்படுத்தும் முறைகளும்!

வாகன காப்பீடும் இதனை பயன்படுத்தும் முறைகளும்!

நான்தான் நிறுத்தி நிதானமாக வண்டி ஓட்டுகிறவனாச்சேஎன் னோட வாகனத்துக்கு எதுக்கு இன்ஷூரன்ஸ்?" என்று கேட்பவர் கள் நிறைய! இந்த எண்ணம் தவறா னது. நீங்கள், சாலையில் நிதான மாகச் செல்பவராக இருக்கலாம். ஆனால் எதிரே, பின்னால், முன்னா ல், பக்கவாட்டில்
என அனைத்து திசைகளிலிருந்தும் வரும் வாகன ஓட்டிகளும் நிதானமாக வருவார் கள் என்பதற்கு எந்த உத்தரவாதமு ம் இல்லை.
சாலையில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்பதால், மோட்டார் இன்ஷூரன்ஸ் 101% அவசியம்.
உங்கள் வாகனம் விபத்தில் சிக்கி சேதமானால், திருடு போனால், பயணிகள் உயிரிழந்தால், பாதசாரிகள் பாதிக்கப்பட்டால் உங்களை பொருட் சேதத்திலிருந்து பாது காப்பதாக இந்த மோட்டார் இன் ஷூரன்ஸ் இருக்கிறது. மேலும், உங்கள் வாகனம் மோதி இதர வாகனம், சொத்துகள் பாதிப்பு க்கு உள்ளாகும்போதும் இன் ஷூரன்ஸ் கை கொடுக்கிறது. மேலும், இன்ஷூரன்ஸ் நமக்கு என்னென்ன நன்மைகள் அளிக் கின்றன? எப்படியெல்லாம் இதைப் பயன்படுத்த முடியும் என்பதைப் பார்ப்போம்.
இன்ஷூரன்ஸ் கட்டாயம்!
சாலைகளில் ஓடும் வாகனங்கள் அனைத்துக்கும் மோட்டார் இன் ஷூரன்ஸ் கட்டாயம் எடுத்திருக்கவேண்டு ம் என்பது சட்டம். வாகனம் ஓட்டும் போது, ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்றிதழ் போன் றவை கட்டாயம் இருக்க வேண்டும். கூட வே, இன்ஷூரன்ஸ் பாலிஸி சான்றிதழின் நகலையும் வைத்திருக்க வேண்டும்.
எங்கே பாலிஸி எடுப்பது?
புதிய வாகனமாக இருந்தால், ஷோரூமி லேயே பாலிஸி எடுப்பது குறித்த விவரம் சொல்வார்கள். உங்கள் வீடு அல்லது அலுவலகத் தின் அருகிலுள்ள இன்ஷூரன்ஸ் நிறுவன த்துக்கு நேரில் சென்று பாலிஸி எடுத்துக் கொள்ளலாம். கூடவே வாகனத்தையும் எடுத்துச்சென் றால் வேலை சுலபமாக முடிந் து விடு ம்.
பாலிஸியில் உங்கள் பெயர், முகவரி, வாகனத்தின் பதிவு எண், இன்ஜின் மற்றும் சேஸி எண்கள் போன்றவை பாலிஸி சான்றிதழில் சரியாக இருக்கிற தா என்று பாலிஸி எடுக்கும்போ தே சரிபார்த்துக்கொள்ளவேண் டும். தவறு இருந்தால், உடனே அதைத்திருத்தச் சொல்லவேண்டும். திருத்தப்பட்ட இடத்தில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் அலுவலக முத்திரை இருக்கவேண்டியது அவசியம். அதேபோல, இன்ஷூரன் ஸ் நிறுவனத்தின் ஆவணங்களிலும் அந்த மாற்றம் செய்யப்பட வேண்டும். இல்லை என்றால் கிளைம் செய்யும்போது சிக்கல் வரும்.
பாலிஸி வகைகள்
மோட்டார் வாகன பாலிஸிகள் இரு வகை கள் உள்ளன. ஒன்று நம் வாகன பாதிப்புக் கு, (அதாவது ஓன் டேமேஜ்)அடுத்து நம் வாகனத் தால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு (அதாவது தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ்).
மூன்றாம் நபர் பாலிஸி
நம்முடைய வாகனம் மோதி, யார் என்றே தெரியாத மூன்றாம் நபர் காயமடைந்தாலோ, உயிரிழந்தாலோ அல்லது அவர்கள் ஓட்டி வந்த வாகனத்து க்கு சேதம் ஏற்பட்டாலோ இழப்பீடு கொ டுப்பது நமது கடமை. இந்த இழப்பீட்டை வழங்க பலருக்கு வசதி வாய்ப்பு இருக்கா து. சிலருக்கு வசதி இருந்தாலும் கொடுக் க மனது இருக்காது. இதுபோன்ற நிலை யில் கை கொடுப்பதுதான் மூன்றாம் நபர் பாலிஸி (Third Party Insurance அல்லது Act Only Policy ). இதன்படி, பாதிக்கப்பட்ட மூன்றாம் நபருக்கு இன் ஷூரன்ஸ் நிறுவ னமே இழப்பீட்டை வழங்கி விடும். வாகன ஓட்டிகள் இந்த பாலிஸி எடுப்பது கட்டாய மாக்கப் பட்டு இருக்கிற து.
தனி நபர் பாலிஸி
'மூன்றாம் நபருக்கு மட்டும்தான் இன்ஷூரன்ஸ் பாதுகாப்பா? வாகன த்தை ஓட்டும் எனக்கு இல்லையா' என்று கேட்டால், அதற்கு தனி நபர் விபத்து பாலிஸி என ஒன்று இருக்கிறது. அதாவது, வாகனத்தி ன் உரிமையாளர் விபத்தில் உயிர் இழந்தாலோ அல்லது கை, கால் போன்ற உறுப்புகளை இழந்தா லோ இழப்பீடு வழங்குவது தான் இந்த தனி நபர் விபத்து பாலிஸி. இது, மூன்றாம் நபர் பாலிஸியோடு துணை பாலிஸியாகச் சேர்த்து எடு க்கலாம். ஆனால், இதற்குச் சற்று கூடுதல் பிரீமியம் செலுத்த வேண் டும்..
மூன்றாம் நபர் பாலிஸி எடுத்திருக்கும்போது, உங்கள் வாகனம் மோ தி யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், உங்கள் சொந்தப் பணத்தை இழப்பீடு கொடுக்காதீர்கள். 'இவ்வளவு நஷ்டஈடு தருகிறே ன்' என்று யாருக்கும் வாக்குறு தி தராதீர்கள். மேலும், மூன்றா ம் நபருக்கு எந்த இழப்பீடு தருவ தாக இருந்தாலும், இன்ஷூரன் ஸ் நிறுவனத்தைக் கலந்தா லோசித்து முடிவு செய்யுங்கள். மூன்றாம் நபரின் சொத்துக்கு ஏற்படும் பாதிப்புக்கு அதிகபட் சம் 6,000 ரூபாய் மட்டும்தான் இழ ப்பீடு உண்டு. கூடுதல் பிரீமியம் கட்டுவதன் மூலம் இத னை ஒரு லட்ச ரூபாயாக (இரு சக்கர வாகனம்), அல்லது 7.5 லட்ச ரூபாயாக (கார்) அதிகரித்துக் கொள்ள முடியும்.
கவரேஜ்
தேர்ட் பார்ட்டி பாலிஸியில் எவையெல்லா ம் கவர் செய்யப்பட்டு இருக்கிறது? தேர்ட் பார்ட்டி பாலிஸி எடுத்திருப்பவரின் வாகன ம் மோதி மூன்றாம் நபர்களுக்கு ஏற்படும் கீழ்க்கண்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு உண் டு.
இறப்பு உடல் காயம் சொத்துகளுக்குச் சேத ம் வழக்கு செலவு மற்று ம் கிளைம் கோருவதற்கான செலவு.
ஓன் டேமேஜ் பாலிஸி சுய பாதிப்பு
விபத்து என்று மட்டுமில்லாமல் மழை வெள்ளம், தீ, திருட்டு என்று எந்த வடிவத்தில் வாகனத்துக்குச் சேதம் நிகழ்ந்தாலும், அந்தப் பாதி ப்புக்கு இழப்பீடு கிடைக்க வழி செய்வதுதான் ஓன் டேமேஜ் பாலிஸி (Own Damage Policy). இது கட்டாயமாக்கப்படவில்லை என்பதால், இதனை எடுப்பவர்கள் மிகக் குறைவு.
இந்த பாலிஸியில் தீ விபத்து, குண்டு வெடித் தல், வாகனம் தானே தீப்பற்றிக் கொள்ளுதல், மின்னல் தாக்குதல், கொள்ளை, கலவரம் மற் றும் போராட்டம், பூகம்பம் (தீ மற்றும் நில அதிர்வால் சேதம்), வெள்ளம், புயல், தீவிரவாத செயல்களாலும் சாலை, ரயில், கப்பல், விமானம், லிஃப்ட், எலிவேட்டர் போன்றவற்றி ல் எடுத்துச் செல்லும் போது சேதம் அடைந்தாலும், நிலம் மற்றும் பாறை சரிவு போன்ற காரண ங்களாலும் வாகனத்துக்கு ஏற்படும் பாதிப்பு/சேதத்துக்கு இழப்பீடு வழங்கப்படும். சுருக் கமாகச் சொன் னால், தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் வாக னத்தின் மூலம் பிறருக்கு ஏற் படும் இழப்பையும், ஓன் டே மேஜ் பாலிஸி வாகன உரி மையாளருக்கு ஏற்படும் நஷ் ட த்தையும் ஈடு செய்யும் விதமாக அமையும்.
ஒருங்கிணைந்த பாலிஸி
மேற்கண்ட இரு வகையான பாலிஸிகளின் பலன்களை ஒருசேரத் தருவது ஒருங்கிணைந்த பாலிஸி. அதாவது (Comprehensive policy ), விவரம் தெரிந்த வாகன ஓட்டிகள் அனைவரும் எடுக்கும் பாலிஸி யாக இது இருக்கிறது.
பிரீமியம் எப்படி நிர்ணயிக்கிறார்கள்?
மோட்டார் இன்ஷூரன்ஸில் பல்வேறு அம்ச ங்களின் அடிப்படையில் பிரீமியம் நிர்ணயி க்கப்படுகிறது. பொதுவாக, வாகனத்தின் திறன் (Cubic Capacity), மாடல் (உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டு), காரின் பயன்பாடு, ஓட்டப்ப டும் பகுதி, பாலிஸிதாரர் இதற்கு முன் கிளைம் செய்த விவரம், இன் ஷூரன்ஸ் தொகை, பிராண்ட் மதிப்பு (குறிப்பாக, வாகனத்தின் மறு விற்பனை விலை) போன்ற வற்றைப் பொறுத்து பிரீமியம் அமையும்.
தேர்ட் பார்ட்டி பாலிஸி
மூன்றாம் நபர் பாலிஸிக்கான பிரீமியம், வாகனத்தின் செயல் திறனைப் பொறுத்து அமையும். இரு சக்கர வாகனங்களுக்கு 250 சிசிக்குக் கீழ் மற்றும் 250 சிசிக்கு மேல், கார்களுக்கு 1200 சிசி-க் குக்கீழ் மற்றும் 1200 சிசி-க்கு மேல் என்பதைப் பொறுத்து இது அதி கரிக்கிறது. அதாவது சிசி அதிகரிக்க அதிகரிக்க பிரீமியம் அதிகமா கும்.
ஓன் டேமேஜ் பாலிஸி
ஓன் டேமேஜ் பாலிஸிக்கான பிரீமியம் வாகனத்தின் சந்தை மதிப்பு மற்றும் வாகனத்தின் செயல் திறனைச் சார்ந்திருக்கும். இதிலும், சிசி அடிப்படையில் பிரீமியம் மாறுபடும். இந்த பாலிஸியில் வாகனத்து க்கு ஏற்படும் சேதம் தவிர, வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உடன் பய ணிப்பவர்களையும் கூட கூடுதலாக பிரீமியம் செ லுத்தி 'கவர்' செய்ய முடியும்.
போதுமான இன்ஷூரன்ஸ் என்பது எது?
போதுமான அளவுக்கு இன் ஷூரன்ஸ் இருந்தால்தான் கிடைக்கின்ற இழப்பீட்டுத் தொகை, பாதிப்பை ஈடு செய்வதாக இரு க்கும். அதே சம யம், அதிக தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்தால், தேவையில்லாம ல் அதிகமாக பிரீமியம் கட்ட வேண்டியது வரும். அதே நேரத்தில், பிரீமியத் தொகைக்குப் பயந்து குறைவான தொகை க்கு பாலிஸி எடுத்தால், பாதிப்பு ஏற்படும்போது, குறைவான தொ கைதான் இழப்பீ டாகக் கிடைக்கும். அப்போது கையிலிருந்து பணம் போட்டுச் செலவழிக்க வேண் டிய நிலை ஏற்படும். எனவே, சரியான அளவு இன்ஷூரன் ஸ் செய்வது 100 சதவிகிதம் அவசியம். கிட்டத்தட்ட வாக னத்தின் மார்க்கெட் மதிப்புக் கு பாலிஸி எடுப்பதுதான் சரி யாக இருக்கும்.
புதிய வாகனத்தின் பிரீமியம் அதன் ஷோரூம் விலையைச் சார்ந்து இருக்கும். பழைய கார் என்கி றபோது, 'ஐ.டி.வி' (IDV – Insured's Declared Value) என்ற மதிப்புக்கு எடுத்துக் கொள்ளலாம். வாகனத்தின் சந்தை மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வரும். இந்தச் சந்தை மதிப்புதான், அதிக பட்ச இழப்பீடு தொகையாக இருக்கும். எனவே, 'ஒருவர் தேர்ந் தெடுக்கும் இன்ஷூரன்ஸ் தொகை ஐ.டி.வி வாகனத்தின் சந்தை மதிப்பு' ஆகிய மூன்றும் ஒன்றாக இருப்பதுதான் சரி.
ஐ.டி.வி தேய்மானம் எவ்வளவு?
கார் வாங்கும் அனைவரும் அத னைச் சரியாகப் பராமரித்து வரு வார்கள் என்று சொல்ல முடியா து. இதனால், வாகனத்தின் தேய் மானம் ஒவ்வொரு வாகனத்துக் கும் வேறுபடும். என்றாலும் தோராயமாகக் கணக்கிட வேண் டும் என்றால், வாகனத்தின் ஐ.டி. வி தேய்மானத்தைக் கீழ்க்கண் டவாறு வைத்திருக்கிறார்கள்.
ரப்பர், நைலான், பிளாஸ்டிக் பாகங்கள், டியூப் மற்றும் பேட்டரிகளு க்கு 50 சதவிகிதம், ஃபைபர் கிளாஸ் பாகங்கள் 30 சதவிகிதம், கண் ணாடிப் பொருட்களுக்குத் தள்ளுபடி இல்லை. மேற்கண்ட விகிதத்தி ல் தேய்மானம் கழிக்கப்பட்டு மீதியுள்ள தொகைக்குத்தான் இன்ஷூ ரன்ஸ் எடுக்க முடியும்.
அதிக பாதுகாப்புடன் ஓட்டுபவ ருக்குக் குறைவான பிரீமியமு ம், கவனக்குறைவாக ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவருக்கு அதிக பிரீமியமும் வசூலிக்கப் படும்.
ரேஸக்குத் தனி இன்ஷூரன்ஸ்!
சாதாரண பாலிஸியை எடுத்து விட்டு, மோட்டார் சைக்கிள் அல்லது கார் பந்தயங்களில் பங்கேற்று சேதம் ஏற்பட்டால், இழப்பீடு கிடைக்காது. பந்தயங்களில் கலந்து கொள்பவர்கள் அதற்கென இருக்கும் தனி பாலிஸியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பிரீமியம் சற்று அதிகமாக இருக்கும்.
அனாமத்து வாகனம் மோதி னாலும் இழப்பீடு!
சாலையில் செல்பவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகன ம் மோதி, பாதிக்கப்பட்டால் இழ ப்பீடு வழங்கப்படுகிறது. இதற் காக மத்திய அரசு 'சோலடிம் ஃபண்ட்' (Solatium Fund) என்ற நிதியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கான பிரீமியத்தில் 70 சத விகிதம் இந்திய பொது காப்பீடு கழகம் கொடுக்கிறது. மீதியை மத்திய மாநில அரசுகள் செலுத் துகின்றன. இதன்படி மரணம் என்றால் 25 ஆயிரம் ரூபாயும், உடல் உறுப்புகளை இழந்தால் அல்லது படுகாயம் அடைந்தால் 12,500 ரூபாய் இழப்பீடும் வழங் கப்படுகின்றன.
இந்தியாவில் பிரீமியம் குறைவு !
தற்போது இந்தியாவில் ஒரு வாகனத்துக்கு மோட்டார் இன்ஷூரன் ஸ் எடுக்க, அதன் மொத்த விலை யில் 3 சதவிகிதத்துக்கும் குறை வாகத்தான் செலவாகிறது. சர்வ தேச அளவில் அது 5 சதவிகிதமா க இருக்கிறது.
2009-ல் இந்திய மோட்டார் இன் ஷூரன்ஸ் சந்தையில் எஸ்.பி.ஐ, ஐ. ஏ.ஜி நிறுவனத்துடன் இணைந் து கூட்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்க இருக்கிறது. இது தவிர , ரஹேஜா க்யூ.பி.இ, யுனிவர்சல் சாம்போ போன்ற நிறுவனங்களும் இந்தியச் சந்தையில் களம் இறங்குகின்றன. இதனால், மோட்டார் பாலிஸிகளுக்கான பிரீமியம் இன்னும் குறையலாம்.
தற்போது மோட்டார் பாலிஸிகள் ஆன் லைன் மூலம் அதிக எண்ணி க்கையில் விற்பனை செய்யப் படுவதால், பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பிரீமியத் தள்ளுபடி அளிக்கி ன்றன. இதனாலும் பிரீமியம் குறைக்கப்படலாம். வாகன விற்பனை தேக்கம் ஏற்பட்டி ருப்பதால், வாகன உற்பத்தி யாளர்கள், 'இன்ஷூரன்ஸ் இலவசம்' என்று வாடிக்கை யாளர்களைக் கவரும் நிலை 2009-ம் ஆண்டும் தொடரு ம் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
கூடுதல் கவரேஜ்!
வாகனத்தை தவிர, அதிலுள்ள ஸ்டீரியோ செட், ஏ.ஸி போன்றவற் றையும் கூடுதல் பிரீமியம் செலுத்தி இன்ஷூ ரன்ஸ் செய்து கொள்ள லாம்!
தவணையில் பிரீமியம்?
ஆயுள் இன்ஷூரன்ஸ் போல மாதம், காலாண்டு, அரையாண்டுக்கு ஒரு முறை பிரீமியம் கட்டும் வசதி மோட்டார் இன்ஷூரன்ஸில் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டும். கிரெ டிட் கார்டு மூலம் பிரீமியம் செலுத்தவும் அனுமதிக்கப்படுகிறது . கிரெடிட் கார்டு நிறுவனத்துக்கு தவணையில் கடனை அடைத்துக் கொள்ளலாம்.
வாகனம் திருடு போனால்..!
வாகனம் திருடுபோய்விட்டா ல் முதலில் அருகிலுள்ள கா வல் நிலையம் மற்றும் பாலிஸி எடுத்த இன்ஷூரன் ஸ் நிறுவனத்துக்கு எழுத்து மூலம் புகார் கொடுக்க வே ண்டும். காவல் நிலையத்தின் முதல் தகவல் அறிக்கை, விசாரணை அறிக்கை போன் றவற்றை இன்ஷூரன்ஸ் நிறு வனம் கேட்டு வாங்கிக் கொள்ளும்.
திருடு போன வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு ஏதாவது சேதம் ஏற்பட்டு இருந்தால், அதற்கு கிளைம் உண்டு. வாகனத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் வாகனத்தின் சந்தை விலை, ஐ.டி. வியைப்பொறுத்து இழப்பீடு தருவா ர்கள். அதாவது, காணாமல் போன வாகனத்தின் மறுவிற்பனை விலை தான் இழப்பீடாகக் கிடை க்கும். இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட் டதும், வாகனத்தின் பதிவு எண் இன் ஷூரன்ஸ் நிறுவனத்தின் பெயரில் மாற்றப்படும். மேலும், வாகனம் தொடர்பாக உங்களிடம் உள்ள மாற்றுச் சாவி, இதர ஆவணங்களை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும். மேலு ம், இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு கோர்ட் ஃபீஸ் ஸ்டாம்ப் ஒட்டிய தாளில் கடிதம் ஒன்றும் எழுதிக் கொடுக்க வேண்டும்.
பழைய வாகனத்தை வாங்கி, ஆர். டி.ஓ அலுவலகத்தில் உங்கள் பெய ருக்கு மாற்றி இருப்பீர்கள். அதே நேரத்தில், இன்ஷூரன்ஸை மாற்ற பலர் தவறி விடுகிறார்கள். இது தவ று. வாகனப் பதிவு மற்றும் இன்ஷூர ன்ஸ் இரண்டும் ஒரே பெயர், முகவ ரியாக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் இழப்பீடு கிடைக்காது. ஆர்.சி புத்தக ம் மற்றும் இன்ஷூரன்ஸ் பாலிஸியில் பெயர் மாற்றிக் கொள்வது மிக மிக அவசியம்!
தவறு என்றாலும்..!
சாலையில் தவறான பாதையி ல் சென்று விபத்தில் சிக்கினால் அல் லது சாலை விதியை மீறி (வேண்டும் என்றே இல்லாமல்) விபத்துக் குள்ளானாலும் கிளைம் செய்ய முடியும். அதற் காக, இதையே வழக்கமாகக் கொண்டிருந்தால் உங்களுக்கு அடுத்தமுறை பிரீமியம் தொ கை அதிகரிக்கப்பட்டு விடும்!
பொது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்
நேஷனல் இன்ஷூரன்ஸ்
ஓரியண்டல் இன்ஷூரன்ஸ்
யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ்
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்
ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ்,
ஹெச்.டி.எஃப்.சி. இ.ஆர்.இ.கோ. ஜெனர ல் இன்ஷூரன்ஸ்
டாடா ஏ.ஐ.ஜி. ஜெனரல் இன்ஷூரன்ஸ்
பஜாஜ் அல்லயன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ்
ராயல் சுந்தரம் இன்ஷூரன்ஸ்
இஃப்போ டோக்கியோ ஜெனரல் இன்ஷூர ன்ஸ்
மெடிக்ளைம், தனி நபர் விபத்து பாலிஸியு ம் அவசியம்!
மோட்டார் இன்ஷூரன்ஸில் ஒருங்கிணை ந்த பாலிஸியை எடுத்திருக்கும் அதே நேர த்தில், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் சூழ் நிலை வந்தால், அதற்குக் கைகொடுக்கும் மெடிக்ளைம் பாலி ஸியை எடுத்துக் கொள்வது அவசியம். இதில், விபத்தின் போது பாதி ப்பு ஏற்பட்டால், கிளைம் கொடுக்கும் தனி நபர் விபத்து பாலிஸியும் ஒரு பகுதியாக இருக்கும். அதே நேரத்தில், விபத்தினால் மரணம் அல்லது கை, கால் போன்ற உறுப்புகளை இழந்து ஊனமானால் இழப்பீடு கிடை க்கும். தனி நபர் விபத்து பாலி ஸியை (Personal Accident Policy) தனியாக எடுத்துக் கொள்வது ரொம்ப நல்லது. இந்தப் பாலிஸியை பொதுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் குறைந்த பிரீமியத்தில் அளித்து வருகின்றன. இவை, 'ஜனதா தனிநபர் விபத்து பாலிஸி' என்ற பெய ரில் வழங்கப்படுகின்றன. இந்த பாலிஸியை எடுத்திருந் தால் உலகி ல் எங்கு விபத்து நடந்தாலும் இழப்பீடு உண்டு.
இந்த தனி நபர் பாலிஸியில் மூன் று வகைகள் இருக்கின்றன. விபத் தில் இறந்தால் மட்டுமே இழப்பீடு வழங்குவது ஒரு வகை. மற்றொ ன்று, விபத்தில் மரணம் மற்றும் அடிபட்டால் இழப்பீடு கிடைக்கும். கடைசியாகச் சொல்லப்பட்ட பா லிஸியில் பிரீமியம் சிறிது அதிகம் என்றாலும், அதுதான் அதிக ஆதா யம் தருவதாக இருக்கும். மூன்றா ம் வகை, விபத்தினால் நிரந்தர மாக அல்லது தற்காலிகமாக ஊனம் ஏற்பட்டு, அதனால் பணிக்குச் செல்ல முடியவில்லை என்றால், அக்கால கட்டத்தில் வாரம்தோறு ம் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாகத் தரும் பாலிஸி. சுமார் 100 வார காலத்துக்கு இந்த இழப்பீடு கிடை க்கும்.
இந்த தனி நபர் விபத்து பாலிஸியில் மருத்துவச் செலவு மற்றும் நஷ்டத்துக்கு ஏற்ப இழப்பீடு கொ டுக்க மாட்டார்கள். விபத்து ஏற்பட்டால் பாலிஸி யில் குறிப்பிட்டபடி, இழப்பீட்டுத் தொகையைத் தந்து விடுவார்கள். தனி நபர் விபத்து இன்ஷூர ன் ஸில், பாலிஸி தொகை அவரின் வருமானத்தைப் பொறுத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்தால் நிர்ண யிக்கப்படும் என்பதால், பாலிஸிதாரர் தன்னால் பிரீமியம் கட்டமுடியும் என்றாலும், அதிகத்
 தொ கைக்கு பாலி ஸி எடுக்க முடி யாது. பொதுவாக, ஒருவரின் ஆண்டு வருமானத்தை போல் 5-7 மடங்குக்கு இந்தப் பாலிஸியை எடுத்துக் கொள்ள முடியும். இதை பொதுவாக 14-70 வயதினர் எடுத்துக் கொ ள்ளலாம். பொதுவாக, 45-50 வயதுக்கு மேல் என்றால், மருத்துவப் பரிசோதனை அறி க்கை தேவைப்படும்.
ஜனதா பாலிஸியில் அதிக பட்சம் ஒரு லட்ச ரூபாய்க்குத் தான் பாலிஸி எடுக்கும் நிலை இருக்கிறது. ஆண்டு பிரீமியம் சுமார் 60-75 ரூபாய்தான். பொதுவான தனி நபர் விபத்து பாலிஸியில் ஒரு லட்ச ரூபாய்க்கு ஆண்டு பிரீமியம் சுமார் 130-150 ரூபாய்தான். இதில் கூடு தல் தொகைக்கு பாலிஸி எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. பாலி ஸிதாரரின் வயது, பணியின் போது அவருக்குள்ள இடர்பாடு போன்ற வற்றைப்பொறுத்து பிரீமியம் மாறுபடும். அலுவலத்துக்குள் வேலை பார்ப்பவரைவிட, அடிக்கடி வெளியில் சென்று வருபவ ருக்கு பிரீமி யம் அதிகமாக இருக்கும்.
யாரிடம், எப்படி புகார் செய்வ து?
பொதுவாக, மோட்டார் இன்ஷூ ரன்ஸில் இழப்பீட்டுத் தொகை கு றைவாக வழங்கப்படுவது தொடர்பாகத்தான் அதிக புகார் கள் எழுகி ன்றன,
இன்ஷூரன்ஸ் சம்பந்தமான புகாரை, முதலில் இன்ஷூரன் ஸ் நிறு வனத்திலுள்ள குறை தீர்ப்பு அதிகாரியிடம் எழுத்து மூலம் கொடுக்க வேண்டும். 10-15 நாட்களில் பதில் கிடைக்கவில்லை அல் லது பதில் திருப்திகரமாக இல்லை என்றால், இன்ஷூரன்ஸ் நிறுவ னத்தின் கோட்ட அல்லது மண்டல அலுவலகத்திலுள்ள குறை தீர்ப்பு அதிகாரியிடம் புகார் கொடுக்க வே ண்டும். அப்படியும் பிரச்னை தீரவில் லை என்றால், இன்ஷூரன்ஸ் ஆம்பு ட்ஸ்மன் என்ற அமைப்பை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை முகவரி: Office of the Insurance Ombudsman, Fatima Akhtar Court, 4th Floor, 453 (old 312), Anna Salai, Teynampet, CHENNAI – 600 018. Tel.:- 044-24333678/664/668 Fax:- 044-24333664
 
Email:-insombud@md4.vsnl.net.in
இந்த ஆம்புட்ஸ்மன் அமைப்பு ரூ.20 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட தனி நபர் பாலிஸிகளுக்கான கிளைம் கொடுக்கக் கூடிய வழக்குகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும். கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. தீர்ப்பு பெரும் பாலும் மனிதாபிமான அடிப்ப டையில் இருக் கும்.
இந்த அமைப்பு அளிக்கும் தீர்ப் பை இன்ஷூரன்ஸ் நிறுவனங் கள் ஏற்று நிறைவேற்ற வேண்டு ம். உங்களுக்கு இங்கும் திருப்தி இல்லை என்றால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். இதில், நீதிமன்றம் மற்றும் வக்கீல் கட்டணம் இருக்கிறது. வழக்கு நீண்ட காலத்துக்கு இழுக்கு ம்.
எதிலும் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படவில்லை என்றால், இன்ஷூரன் ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐ.ஆர்.டி.ஏ) பொதுமக்கள் குறை தீர்ப்புப் பிரிவுக்கு எழுத் து மூலம் புகார் கொடுக்க வே ண்டும்.
Insurance Regulatory and Development Authority, 3rd Floor, Parisrama Bhavan, Basheer Bagh, HYDERABAD 500 004. Andhra Pradesh (INDIA ) Ph: (040) 23381100 Fax: (040) 6682 3334. Email:irda@irda.gov.in
வாகனத்தின் உரிமையாளர் கடந்த ஆண்டுகளில் இழப்பீடு கோரிய விவரம், உரிமையாளர் மற்றும் ஓட் டுநரின் கண் பார்வைத் திறன் மற்று ம் உடல் ஆரோக்கியம், இரவில் வீட்டு காம்பவுண்டுக்குள் அதற்குரி ய ஷெட்டில் நிறுத்துகிறாரா அல்ல து வீட்டு முன்பாக சாலையில் நிறு த்துகிறாரா என்பதை எல்லாம் கவ னித்து பிரீமியத் தொகையை நிர்ண யிப்பார்கள்.
உரிமையாளர் வாகனத்தை ஓட்டா மல் டிரைவர் ஓட்டுவதாக இருந்தா ல், 'வொர்க்மேன்ஸ் காம்பென்சேஷன்' சட்டப்படி கொடுக்க வேண் டிய நஷ்டஈட்டுக்குத் தனியே பாலிஸி எடுப்பது அவசியம். கூடுதல் பிரீமியம் செலுத்தி இந்த பாலிஸியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதேபோல், வாகனத்தின் உரிமையாளருடன் குடும்பத்தினர் அடிக் கடி பயணம் செய்பவர்களாக இருந்தால், அவர்கள் பெயரையும் பாலி ஸியில் பதிவுசெய்து, தனிநபர் விபத்து பாலிஸி எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிஸி யில் டிரைவருக்கு அதிகபட்ச மாக ஒரு லட்ச ரூயாய்க்கும், மற்றவர்களுக்கு 2 லட்ச ரூபா ய்க்கு கவரேஜ் இருக்கு ம்.
மேலும், காரில் உறவினர்கள் நண்பர்கள்- அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் என பலர் பயணம் செய்யக் கூடும் என்றால், இவர் களுக்கும் பயணிகளு க்கான தனி நபர் விபத்து பாலிஸி எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பயணிகள் பாலிஸி, வாகன உரிமையாளருக்கும் டிரைவருக்கும் பொருந்தாது.
வாகனத்தில் சி.என்.ஜி, எல்.பி.ஜி சிலிண்டர்களைப் பொருத்தினா ல், அவற்றை ஆர்.டி.ஓ-வின் அனு மதியோடு மேற்கொள்ள வேண்டு ம். இந்த விவரத்தை வாகனத்தின் பதிவுப் புத்தகத்தில் சேர்த்து, நகல் எடுத்துக் கொண்டு இன்ஷூரன் ஸ் நிறுவனத்தில் கொடுக்க வே ண்டும். இதற்கான பிரீமியம், இந் த கிட்டின் மதிப்பில் சுமார் 4 சதவி கிதம் அதிகமாக இருக்கும்.
வெளிநாட்டு கார் என்றால், வாகனப் பொறியாளர் ஒருவரின் மதிப்பீ ட்டை அடிப்படையாகக் கொண்டு, அதன் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப பிரீமியம் இருக் கும்.
பொதுத்துறை இன்ஷூரன்ஸில் பிரீமியக் கட்டுப்பாடு 2009, ஜன வரி முதல் நீக்கப்பட்டு விட் டது. அதனால், இன்ஷூரன்ஸ் நிறுவ னங்கள் கூடுதல் கவரேஜ் அளி த்து, அதற்கு ஏற்ப பிரீமியத் தொ கையை நிர்ணயித்துக் கொள்ள லாம் என்ற நிலை உருவாகி இரு க்கிறது.
பிரீமியச் செலவைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?
வாகன இன்ஷூரன்ஸ் எடுப்பவர் அங்கீகரிக்கப்பட்ட வாகன சங்கத்தி ன் உறுப்பினர் என்றால், பாதுகாப்பு பற்றி அவர் விழிப்பு உணர்வு மிக்க வராக இருப்பார் என்று கருதி, அவரு க்கு பிரீமியத்தில் 5 சதவிகிதம் (அதிக பட்சம் 100-500 ரூபாய்) தள்ளுபடி தரப்படுகிறது.
திருட்டுத் தடுப்புக் கருவி, வாகனத்தில் பொருத்தி இருந்தால், பிரீமிய த்தில் சலுகை இருக்கிறது.
வாகனத்தைப் பயன்படுத்தாத போது
வேலை விஷயமாக வெளி நாடு அல்லது வெளி மாநிலத் துக்கு 3 அல்லது 6 மாத காலத் துக்குச் சென்றால், வாகனத் தை கார் ஷெட்டி ல் பாதுகாப் பாக நிறுத்தி விட்டுச் செல் கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது, அந்தக் காலத்துக்கான பிரீமியச் செலவு வீண்தானே? பிரீமியச் செலவைக் குறைத்து, அந்தக் காலத்தில் தீ, வெள்ளம், திருட்டு, கொள்ளை போன்றவற்றிலிருந்து மட்டும் வாக னத்தைப் பாதுகாக்க பாலிஸி எடுக்கலாம். இதை 'லெய்ட் அப் பீரியட் பாலிஸி' என்பார்கள். விஷயத்தை இன்ஷூரன்ஸ் நிறுவன த்துக்கு எழுத்துமூலம் தெரிவித்தால், அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார் கள். ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் சொல்லும் முறையி ல் வாகனத்தை இந்தக் கால கட் டத்தில் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
ஊர் திரும்பிய பிறகு காரை ஷெ ட்டிலிருந்து எடுத்துவிட்டு, இன் ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு எழு த்துமூலம் தெரிவித்துவிட்டால், உங்கள் வழக்கமான பாலிஸி நடைமுறைக்கு வந்துவிடும். இந்த முறையில் பிரீமியச் செலவைக் குறைக்க முடியும்.
நோ கிளைம் போனஸ்
இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குக் கூடிய வரையில் நஷ்டம் வராமல் அதாவது, இழப்பீடு கோரும் சூழ்நிலை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது நமக்கும் நல்லது; இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் நல்லது. ஓராண்டில் இழப்பீடு எதுவும் பெறவில்லை என் றால் 'நோ கிளைம் போனஸ்' என்ற சலு கையை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அளிக்கின்றன.
ஓராண்டு இழப்பீடு எதுவும் இல்லாமல் பாலிஸி காலாவதியாகும் தேதிக்கு முன் புதுப்பித்தால், அடுத்த ஆண்டுக்கான பிரீமியத்தில் தள்ளுபடி கொடுக்கிறார்கள். சில நிறுவனங்கள் அதே பிரீமியத்துக் குக் கூடுதல் கவரேஜ் தருகின்றன.
அதே நேரத்தில், இழப்பீடு கோரப்பட்டிருந்தால், அடுத்து வரும் ஆண் டில் பிரீமியம் அதிகமாகும். இதை 'மாலஸ்' (Malus) என்பார்கள். இந் த அதிகரி ப்பு 10 சதவிகிதத்தில் இருந் து 50 சதவிகிதம் வரை இரு க்கும்.
இந்த பிரீமியத் தள்ளுபடி ஓன் டேமேஜ் பாலிஸியின் பிரீமியத்துக்கு மட்டுமே கிடைக்கும். மேலும், தொடர்ந்து 'கிளைம்' செய்யவில்லை என்றால் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் தள்ளுபடி சதவிகிதம் அதிகரிக்கும். இடையில், கிளைம் செய்த பிறகு பாலிஸியைப் புதுப்பித்தால், போ னஸ் சதவிகிதத்தைக் குறைத் து விடுவார்கள். இழப்பீடு தொ கை 'நோ கிளைம் போனஸ்' தொகையைவிட குறைவாக இருந்தால், இழப்பீடு கேட்காம ல் இருப்பது நமக்கு லாபம்.
உங்களுடைய பாலிஸி காலா வதி ஆகிவிட்டது, அதே நேரத்தி ல் நோ கிளைம் போனஸ் இரு க்கிறது என்றால், பாலிஸி காலாவதியா னதிலிருந்து 90 நாட்களுக்குள் புதுப்பித்தால், நோ கிளைம் போன ஸ் பிரீமியத் தள்ளுபடியைப் பெற்றுக் கொள்ளலாம்.
புதிய வாகனம் வாங்குவதாக இருந்தால், பழைய வாகனத்தின் (விற் பனை செய்யும் பட்சத்தில்) நோ கிளைம் போனஸை புதிய காரின் பாலிஸிக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு வாகனத்தை விற்கும் முன் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு முன் கூட்டி யே நோ கிளைம் போனஸ் இருப்பதைத் தெரிவிக்க வே ண் டும்.
நோ கிளைம் போனஸ் எவ்வ ளவு?
ஒரு வாகனத்தை விற்று விட் டு, புதிய வாகனம் வாங்கும் போது 'நோ கிளைம் போனஸை' பயன்படுத்திக் கொள்ள முடியும். பாலிஸி காலா வதி ஆவதற்கு முன் இப்படி புதுப்பிப்பது அவசியம்.
'வாலன்டரி டிடக்டிபிள்
'வாலன்டரி டிடக்டிபிள்' (Voluntary Deductible) என்று ஒரு விஷயம் இருக்கி றது. இதில் 'ரூ.5,000 அல்லது ரூ.10,000 வரையிலான பாதி ப்புகளை நானே சமாளித்துக் கொள்கிறேன். அதற்கு இழப் பீட்டுத் தொகை வேண்டாம்' என்று சொல்லிவிட்டால், பிரீ மியம் குறையும். இது பாலி ஸிதாரருக்கு லாபகரமாகவே இருக்கும். சிறிய தொகைக்கு இழப் பீடு கோரிவிட்டு, நோ கிளைம் போனஸ் சலுகையை இழக்க வேண் டாம் இல்லையா?
உடல் ஊனமுற்றவர்களுக்கு, அவர்கள் ஓட்டுவதற்கு வசதி யாக வாகனம் மாற்றி வடிவமை க்கப்பட்டு இருந்தால், பிரீமியத் தில் (ஓன் டேமேஜ்) 50 சதவிகித ம் தள்ளுபடி இருக்கிறது. ஊன முற்றோருக்கு பிரத்யேக சேவை செய்யும் நிறுவனங்களுக்கும் இதேபோல் சலுகை இரு க்கிறது.
பழைய கார் வாங்கும்போது
பழைய வாகனத்தை வாங்கும்போது, அந்த வாகனத்தின் இன்ஷூர ன்ஸ் பாலிஸியை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். தேதி முடிந்திருந்தால், புதிய பாலிஸி எடுத்துக் கொள்ள வே ண்டும்.
புதிய வாகனமாக இருந்தாலும் சரி, பழைய வாகனமாக இருந் தாலும் சரி, தேர்டு பார்ட்டி இன் ஷூரன்ஸ் இல்லாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பதிவு செய்து கொடுக்க மாட்டார்கள்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுக்கும்போது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை (Terms and Conditions) நன்கு படித்துப் புரிந்து கொ ண்டு கையெழுத்துப் போடு வது அவசியம். இது சிறிய எழுத்தில் ஆங்கிலம் மற்று ம் ஹிந்தியில் இருக்கும். அர்த்தம் புரியவில்லை என் றால், இன்ஷூரன்ஸ் நிறுவ ன அதிகாரிகளிடம் விளக் கம் கேளுங்கள். இதனைச் செய்தால், பிறகு கிளைம் செய்யும் போது பிரச்னைகள் வர வாய்ப்பு இல்லை.
எதற்கெல்லாம் இழப்பீடு இல்லை?
எதை எல்லாம் செய்தால் கிளைம் கிடைக்கும், கிடைக்காது என்ப தைத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதற்கு ஏற்ப செயல்படுவது ஒன் றே மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பதன் லாபத்தை முழுமை யாகப் பெற உதவும்.
இதர உபயோகம்: தனி நபர் வாகன பாலிஸியில், வாகன த்தை தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்தும்போது பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீ டு கிடைக்கும். அந்த வாகன த்தை வாடகை டாக்ஸியாக அல்லது சரக்கு போக்குவரத்து வாகன மாகப் பயன்படுத்தி, அப்போது விபத்து ஏற்பட்டு இழப்பீடு கோரினால் எதுவும் கிடைக்காது.
ஓட்டுநர் உரிமம்: வாகனத்தை ஓட்டுகிறவர்களிடம் (உரிமையாளர் அல்லது ஓட்டுநர்) முறையான மற்றும் செல்லத்தக்க ஓட்டுநர் உரி மம் இல்லாமல் விபத்து நடந்தால், இழப்பீடு கிடைக்காது.
மது/போதை மருந்து பயன்பாடு: வாகனத்தை ஓட்டுகிறவர்கள் (உரி மையாளர் அல்லது ஓட்டுநர்) மது அருந்திவிட்டு அல்லது போதைப் பொருள் சாப்பிட்டு விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட் டால் இழப்பீடு இல்லை.
பிரேக் டவுண்: வாகனம் பிரேக் டவு ண் ஆனால் இழப்பீடு இல்லை.
டயர் சேதம் அடைந்தால்: டயருக்கு மட்டும் தனியே சேதம் ஏற்பட் டால் இழப்பீடு இல்லை. அதே நேரத்தில், வாகனம் சேதம் அடையும் போது டயரும் பாதிக்கப்பட்டால் இழப்பீடு உண்டு.
தேய்மானம்: நாளடைவில் ஏற்படும் வாகனத்தின் தேய்மானத்துக்கு இழப்பீடு இல்லை.
விபத்து எல்லை: விபத்தானது இந்தி ய நாட்டின் எல்லைக்கு வெளியே நடந்தால் இழப்பீடு கிடைக்காது.
போர் காலத்தில்: போர் நடக்கும் பகு திகளில் இந்த பாலிஸியால் பலன் இல்லை.
தற்கொலைத் திட்டம்: உயிரை மாய் த்துக் கொள்ளும் தற்கொலை எண் ணத்துடன் வாகனத்தை ஓட்டி விபத் து ஏற்பட்டால், இழப்பீடு இல்லை.
வழக்கமான பராமரிப்பு: வழக்கமாக குறிப்பிட்ட இடைவெளியில் மேற்கொள்ளும் பராமரிப்புச் செலவுகளுக்கு கிளைம் கிடையாது.
வயது முக்கியம்: வாகனத்தை 16 வயதுக்கு உட்பட்டவர் ஓட்டி யிருந்தால் இழப்பீடு இல்லை. பழகுநர் உரிமம் பெற்றவர் ஓட்டி வாகனம் விபத்துக்குள்ளானா ல், உடன் உரிமம் பெற்ற ஒருவர் இருந்திருந் தால்தான் இழப்பீடு கிடைக்கும்.
கிளைம் செய்வது எப்படி?
வாகனத்தின் உரிமையாளர்தான் இழப்பீடு கோர முடியும்.
இந்தியாவுக்குள் எந்தப் பகுதியில் வாகன விபத்து நடந்தாலும் இழ ப்பீடுண்டு. மேலும், இழப்பீட்டை உடனே கிளைம் செய்ய வேண்டும். சிறிய ரிப்பேர்களுக்கான தனித்தனி கிளைமை மொத்தமாகச் சேர்த்து வைத் து, கிளைம் செய்தால் தரமாட்டார்கள்.
ஒருங்கிணைந்த பாலிஸி எடுத்திருந்தா ல், வாகனம் விபத்துக்குள்ளான சமயத் தில், அதனை சம்பவ இடத்திலிருந்து பணிமனைக்கு சீர் செய்ய எடுத்துச் செல் வதற்கான கட்டணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனம் அளிக்கும். இந்த க் கட்டணம், ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ. 300.
 காராக இருந்தால் ரூ.1,500.
இதற்கு மேல் கூடுதல் தொகை தேவை என்றால், கூடுதல் பிரீமியம் கட்டி பாலிஸியை முதலிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். அதி கபட்ச அனுமதிக்கப்பட்ட தொகை அல்லது உண்மையில் செலவான தொகை, இதில் எது குறைவோ அதனை இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கும்.
விபத்து நடந்தது என்றால், யாராவ து காயம் அடையும்பட்சத்தில் மோ ட்டார் வாகனச் சட்டப்படி, அவர்களை அருகிலுள்ள மருத்துவமனை யில் சிகிச்சைக்குச் சேர்க்க வேண்டும். விபத்தில் சிக்கிய இதர வாக னங்களின் பதிவு எண், சாட்சிகளின் பெயர், முகவரி, தொலை பேசி எண் போன்றவற்றை முத லில் சேகரித்துக் கொள்ள வேண்டு ம்.
விபத்து ஏற்பட்ட உடனே இன் ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தகவல் கொடுக்க வேண்டும். அவர்களின் அலுவலகத்துக்குச் சென்று அல்லது ஆன் லைன் மூலம் கிளைம் படிவத்தில் பூர் த்தி செய்து கொடுக்க வேண்டு ம். இதனுடன் இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுத்திருப்பதற்கான ஆதாரம், ஆர்.சி. புத்தகத்தின் நகல் மற்றும் அசல், ஓட்டுநர் உரிமத்தின் நகல் மற்றும் அசல், காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கை (விபத் தில் மூன்றாம் நபர் அல்லது வாகனத்துக்கு சேதம் என்றால்) போன்ற ஆவணங்களையும் தர வேண்டு ம்.
மேலும், வாகனத்தின் பாகங் களை மாற்றுவது, பாகங்களை சீர் செய்வது குறித்த மதிப்பீட் டைக் கொடுக்கவேண்டும். இன் ஷூரன்ஸ் நிறுவனம் சர் வேயர் ஒருவரை நியமிக்கும். அவர் பரிசீலனை செய்து இழப்பீட்டுத் தொகையை முடிவு செய்வார். அதன்பிறகு வாகனத் தின் சேதத்தைச் சரி செய்யலாம். தேவை யான ரசீதுகளைச் சமர்ப்பித்தால் சேதம் அடைந்த பாகங்களுக்கு உரிய விலை மற்றும் அதனை சரி செய்ய ஆகும் கூலியை இழப்பீடா கக் கொடுப்பார்கள். இந்தத் தொகையை ரிப்பேர் செய்த நிறுவனம் அல் லது பாலிஸிதாரரிடம் கொடுப் பார்கள்.
வாகனம் முழுவதும் சேதம் அடைந்தாலோ அல்லது ஒரு சில பாகங்கள் சேதம் அடைந் தாலோ அதற்கான இழப்பீட்டை இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஏற்று க்கொள்ளும். நஷ்டம், ஐ.டி.வி. மதிப்பில் 75 சதவி கிதத்துக்கு மேல் இருந்தால், அது மொத்த இழப்பாக எடுத்துக் கொள் ளப்பட்டு முழுத் தொகையும் இழப்பீடாக வழங்கப்படும்.
இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்ட நகரத்தைத் தாண்டி வேறு இடத்தில் விபத்து நடந்தால், அருகிலுள்ள அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தி ன் கிளை அலுவலகத்துக்குத் தக வல் சொல்வதோடு, பாலிஸி எடுத் துள்ள அலுவலகத்துக்கும் தெரிவி க்க வேண்டும்.
மூன்றாம் நபருக்கு இறப்பு அல்லது காயம் ஏற்பட்டால்
ஒருவரின் வாகனம் மூன்றாம் நபர் மீது மோதிவிட்டால், உடனே போலீஸ் மற்றும் இன்ஷூரஸ் நிறுவ னத்துக்குத் தகவல் கொடுக்க வேண்டும்.
மூன்றாம் நபர் பாலிஸியில், ஒரு வாகனத்தால் ஏற்பட்ட விபத்தில் மாட்டிக் கொண்டவர்கள் அல்லது அவர்களின் வாரிசுதாரர்கள், வாக னத்தின் உரிமையாளர் பாலிஸி எடுத்திருக்கும்பட்சத்தில் இன்ஷூ ரன்ஸ் நிறுவனத்தில் இழப்பீடு கோர முடியும். உதாரணத்துக்கு, சுரேஷ் என்பவர் சாலையில் நட ந்து சென்று கொண்டிருக்கிறார். அவர் மீது அருண் என்பவரின் கார் மோதிவிட்டது. இதில் விபத்தில் சிக்கிய சுரேஷ் அல்லது அவரின் வாரிசுகள், அருண் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் இழப்பீடு கோரிப் பெற முடியும்.
சாலையில் போகும் ஏதோ ஒரு வாகனம் மோதி, மூன்றாம் நபருக் குக் காயம் ஏற்பட்டாலோ அல்லது அவரது வாகனத்துக்கு சேதம் ஏற் பட்டாலோ இதற்கு அவர் இழப்பீடு கோர முடியும். அதேபோல, வாகனம் மோதி மூன்றாவது நபர் உயிர் இழக்க நேரிட்டா ல், அவரின் வாரி சுகள் இழப்பீடு கோர முடியும்.
சிறிய காயம், மூன்றாம் நபர் சொத்து சேதம் போன்றவற்றுக்கு வழக் கமாக இன்ஷூரன்ஸ் நிறுவனமே இழப்பீடு அளித்து விடுகிறது.
விபத்தில் மரணம் அல்லது படுகாயம் ஏற்பட்டு இழப்பீடு கோர, எம். ஏ. சி.டி. என்ற வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தை (MACT -Motor Accidents Claims Tribunal) பாதிக்கப்பட் டவர் அல்லது வாரிசுதாரர் அணுகி வழக் குத் தொடரலாம். உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் செயல்படும் இந்தச் சிற ப்பு நீதிமன்றம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை மட்டுமே விசாரித்து தீர்ப்பு வழங்கும்.
வழக்கு தொடரும்போது, போலீஸ் எஃப்.ஐ.ஆர், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், இறப்புச் சான்றிதழ், பாதிக்கப்பட்டவர் மற்றும் இழப்பீடு கோருபவரின் முகவரிக்கான ஆதாரம், மருத்துவ சிகிச்சை பெற்றிரு ந்தால் அதற்கான ஆவணங்கள், விபத்தால் ஊனம் ஏற்பட்டு இருந்தால் அதற்கான மருத்துவச் சான்றிதழ் போன்றவற்றை இங்கே இணை க்க வேண்டியிருக்கும்.
ஒருவேளை விபத்தில் மூன்றாம் நபர் உயிர் இழந் திருந்தால், மரண மடைந்தவரின் வயது, கல்வித் தகுதி, பணி, வருமானம் போன்றவற் றுக்கான ஆதாரங்களை வழக்கு தொடரும் அவரது வாரிசுகள் கொடுக்க வே ண்டி வரும். பாலிஸிதாரரின் சார்பில் இன்ஷூரன்ஸ் நிறுவனம், வக்கீல் ஒருவரை நியமனம் செய்யும். அவருடன் பாலிஸிதாரர் ஒத் துழைக்க வேண்டும். இழப்பீடு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ப தை நீதிமன்றம் சொல்லும், அதைப் பாதிப்படைந்த மூன்றாம் நபருக்கு இன்ஷூரன்ஸ் நிறுவன ம் கொடுக்கும்.
மூன்றாம் நபர் சொத்து சேத வழக் கில், இழப்பீடு எவ்வளவு என்பது முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு அட்டவணையாக வைக்கப்பட்டு இருக்கிறது. சேதம் அடைந்த சொ த்தின் மதிப்பு அல்லது ஏற்பட்டிருக் கும் காயம் பாதிப்பு அல்லது ஊன த்தைப் பொறுத்து இழப்பீடு கிடை க்கும்.
இறப்பு வழக்குகளிலும் இது போன்ற ஓர் அட்டவணை வைத்திருப் பார்கள். மரணம் அடைந்தவரின் வயது, வரு மானத்தைப் பொறுத்து அவ ரின் குடும்பத்துக்கு பாதிப்பு அமையும் என்பதால், இந்த விவரங்கள் கேட்கப்பட்டு அத ற்கு ஏற்ப இழப்பீடு வழங்க ப்படுகிறது. இந்த வழக்குகளி ல் இழப்பீடு கிடைக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால், தாமதமாகும் காலத்துக்கு வட்டிபோட்டு, மொத்தத் தொகை தரப்ப டும்.
இந்த வகை வழக்குகளி ல், டிரைவரின் மீது தவறு இல்லை என்றாலும், மர ணமடைந்த மூன்றாவது நபர்களின் வாரிசுகளுக்கு சுமார் ரூ.50,000 இழப்பீடு கிடைக்கும். டிரைவரின் மீது தவறு இருந்தால் இற ந்தவரின் வயது, வருமா னத்தைக் கணக்கிட்டு இதைவிட கூடுதலான தொகை இழப்பீடாகக் கிடைக்கும்.
வாகனம் காணாமல்போ னால்
வாகனம் காணாமல் போய்விட்டாலோ அல்லது விபத்தில் முழுவது ம் சேதம் அடைந்தாலோ அந்த வாகனத்துக்குரிய முழு மதிப்பையும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாகக் கொடுத்துவிடும். அதாவது, வாகனத்தின் அப்போதைய சந்தை மதிப்பு அல்லது இன் ஷூரன்ஸ் தொகை, இதில் எது குறைவோ அது இழப்பீ டா கத் தரப்படும்.
இன்ஷூரன்ஸ் செய்யப்படாத வாகனம் மீது மோதினால்...
நீங்கள் ஒருங்கிணைந்த பாலிஸி எடுத்திருக்கும் பட்ச தில், உங்கள் வாகனம் இன்ஷூரன்ஸ் செய்யப்படாத வாகனத்தின் மீது மோதி உங்களுக்கும், உங்கள் வாகனத்துக்கும் பாதிப்பு ஏற்பட் டால், அதைப் பற்றி கவலைக் கொள்ள தேவையில்லை. எந்த பாதி ப்புக்கும் இழப் பீடு உண்டு.
இன்ஷூரன்ஸ் சான்றிதழ்

சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போ து, காவல்துறை அதிகாரியி ன் பரிசோதனையின்போது, செல்லத்தக்க இன்ஷூரன்ஸ் சான்றிதழைக் காட்டுவது அவசியம். இல்லை என்றால் ஆயிரம் ரூபாய் வரை அபரா தம் அல்லது மூன்று மாதம் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
ஒவ்வொரு முறை பாலிஸியைப் புதுப்பிக்கும்போதும் புதிய இன் ஷூரன்ஸ் சான்றிதழை வாங்கிக்கொள்வது அவசியம். பாலிஸி சான்றிதழ் தொலைந்து விட்டாலோ, திருடு போனாலோ அல்லது சேதம் அடைந்தாலோ அஃபிடவிட் வாங்கிக் கொடுத்து, அதற்கான கட்டணத்தைச் செலுத்தினால் நகல் சான்றிதழ் தருவார்கள்.
பாலிஸியைப் புதுப்பிக்க
பொதுவாக, மோட்டார் வாகன பாலிஸிகள் ஓராண்டுக்கானவை.
பாலிஸி தேதி முடியும் நாளில் நள்ளிரவு 12 மணி வரை இது பயன் தரும். அதற்கு ஏற்ப முன்கூட்டியே புதுப்பிப்பது அவசியம். ஏற்கென வே பாலிஸி எடுத்த அலுவலகத்துக்குச்சென்றால், புதுப்பித்துக் கொ டுத்து விடுவார்கள். வேறு இடத்துக்குச் சென்றால் புதிதாக ஒரு படி வத்தைப் பூர்த்தி செய்து கொடுப்பதோடு, வாகனத்தையும் கொண் டு செல்ல வேண்டியது வரும்.
பாலிஸியைப் புதுப்பிக்கத் தவறிவிட்டால் இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் பாதிப்பு எதற்கும் 'கிளைம்' அதாவது இழப்பீடு கிடையாது. உரிய காலத்தில் புதுப்பிக்கத் தவ றிவிட்டால், வாகனத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனத்து க்கு நேரில் கொண்டு சென்றுதான் புதிய பாலிஸி எடுக்க முடியும்.
ஆன் லைன் மூலமும் இருந்த இடத்தில் இருந்தே பாலிஸியைப் புதுப் பித்துக் கொள்ள முடியும். பாலிஸி காலம் முடிவடைவதற்கு இரண் டு மாதங்களுக்கு முன்பு கூட இதைச் செய்யலாம்.
இன்ஷூரன்ஸ் பாலிஸியி ல் பெயர் மாற்றம்
பழைய கார் வாங்கும்பட்ச த்தில், ஏற்கெனவே உள்ள இன்ஷூரன்ஸ் பாலிஸியை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு காரை வாங்கிய 14 தினங்க ளுக்குள் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு த் தெரிவிக்க வேண்டும். மேலும், விற்பவர் இன்ஷூரன்ஸ் நிறுவன த்துக்கு கடிதம் ஒன்றை உங்கள் பெயருக்கு மாற்ற சம்மதம் தெரிவி த்துக் கொடுக்க வேண் டும். இதற்கு சிறிய கட்டணம் உண்டு.
கவரேஜ் கவனம்
இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள்சொல்வ து வேதவாக்கு அல்ல. அவர்கள் பாலிஸி பிடிப்பதற்காக சில விஷய ங்களை மிகைப்படுத்திச் சொல்லக் கூடும். அல்லது போதிய விவரம் தெ ரியாமல் சில விஷயங்களுக்கு கவ ரேஜ் இருப்பதாகவும் சொல்லிவிட வாய்ப்பு உண்டு.
எதற்கும் ஏஜென்ட் சொல்லும் விஷயம் எல்லாம் சரிதானா என்பதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. இல்லை என்றால் கிளைம் செய்யும்போது சிக்கல் ஏற்படும்.
ஃபர்ஸ்ட் பார்ட்டி மோட்டார் இன்ஷூரன்ஸ்

இந்தியாவுக்கும் வருகிறது..!
மாதச்சம்பளம் வாங்கும் ஒரு வரின் கார்மீது திடீரென மற் றொரு வாகனம் மோதி விடுகிற து. காருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதா ல், இழப்பீட்டை கோரிப் பெற முடியும். சேதம் அடைந்த அந்த காரை அங்கீகரிக்கப்பட்ட சர் வீஸ் சென்டருக்குக் கொண்டு சென்று சர்வீஸ் செய்ய குறைந்தது 3 முதல் 5 நாட்கள் ஆகிவிடும். அதுவரை கார் உரிமையாளர் தன் அன்றாடப் பணிகளை மேற்கொ ள்ள மிகவும் சிரமப்பட வேண்டியது இருக்கும். பேரம் பேசி ஆட்டோ பிடி க்கவேண் டும் அல்லது மூச்சுக் கூட விட முடியா த நெரிசலான பஸ் பயண ங்களை மேற்கொள்ள வேண்டியது இருக்கும். மோட்டார் இன் ஷூரன்ஸ் எடுத்திருப்பவ ர்களுக்கு இது போன்ற சிக்கல்க ளை ஏற்படுவதைத் தவிர் க்க 'ஃபர்ஸ்ட் பார்ட்டி இன் ஷூரன்ஸ்' என்ற பெயரில் ஒரு திட்டம் தேவைப்படுகிறது. இதற்கா ன முயற்சிகளை இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDA) மேற்கொண் டு வருகிறது.
இதன்படி, கார் விபத்துக்குள்ளா ன தினத்துக்கும், அது சர்வீஸ் செய்ய ப்பட்டு கையில் கிடைக் கும் தினத்துக்கும் இடைப்பட்ட காலத்துக்கு குறிப்பிட்ட தொகை தினசரி அலவன்ஸ் போல வழங் கப்படும். இது போன்ற ஃபர்ஸ்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் ஏற்கென வே வளர்ச்சியடை ந்த பல நாடுகளில் புழக்கத்தில் இருக்கிறது.
நாட்டில் உள்ள பெரும்பாலான பொது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இந்தப் புதிய பாலிஸியை வடிவமைப்பதில் மும்முரமாக களமிறங் கி இருக்கின்றன.
வாகனத்தின் தேய்மானத்துக்கு ஏற்ப பிரீமியத்தைக் குறைக்கவு ம் IRDA அனுமதித்துள்ளது. தற் போது வாகனத்தின் கண்ணாடி, ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பகுதி கள் சேதம் அடைந்தால், முழு இழப்பீடும் வழங்கப்படுவது இல் லை. 50 சதவிகித தொ கைதான் தரப்படுகிறது. மீதியை வாகனத் தின் உரிமையாளர் கையில் இருந்து செலவு செய்ய வேண்டியது வரும். இதிலும், மாற்றம் கொண்டுவரப்பட இருக்கிறது. முழுவது மாக அல்லது குறைந்தபட்சம் உறுதி அளிக்கப்பட்ட நியாயமான தொகை அளிக்கப்பட இருக்கிறது.
இந்த மாற்றங்கள் குறித்து நேஷனல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சென்னை மண்டல மேலாளர் பி. ராமநாராயணன், "வருமானம் சம்பாதித்துத் தரும் டாக்ஸி, வே ன், லாரி, பஸ் போன்ற வர்த் தக வாகனங்கள் விபத்துக்கு உள்ளா கி, வருமானம் பாதிக்கும்போது அதற்கும் கிளைம் கொடுக்கும் விதமாக, கூடுதல் கவரேஜ் உடன் மோட்டார் பாலிஸிகள் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத் தப்பட இருக்கி ன்றன. இது படிப்படியாக தனி நபர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கும் இழப்பீடு வழங்கும் விதமாக வர வாய்ப்பு இருக்கிறது" என்றவர், இன்னும் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் மோட்டார் பாலிஸிக ளில் செய்யப்பட இருக்கின்றன என்பதையும் கூறினார். "மோட்டார் பாலிஸிகளும் மெடிக்ளைம் பாலிஸி போல் 'கேஸ் லெ ஸ்' வசதியுட ன் வர இருக்கின்றன. இந்த பாலிஸி அமலுக்கு வரும் போது, வாகனம் விபத்துக்குள் ளானால், அதன் உரிமையாளர் இன்ஷூரன்ஸ் கால் சென்டருக்கு போன் செய்து விட்டா ல், அவர்கள் மீட்பு வாகனத் தை அனுப்பி விபத்துக்குள்ளான வாகனத்தை அவர் கள் இடத்துக்கு எடுத்துச் சென்று சீர்செ ய்து பாலிஸிதாரருக்குத் தந்து விடுவார் கள். இதற்கான செலவை இன்ஷூரன் ஸ் கால் சென்டர், இன்ஷூரன்ஸ் நிறுவ னங்களிடம் இருந்து கோரிப் பெறும் விதமாக பாலிஸிகள் மாற்றப்பட இருக் கின்றன.
இப்போது வாகனம் 3 ஆண்டு பழமையானதாக இருந்தால், 25 சத விகிதம் தேய்மானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, மீதிக்குத் தான் இன்ஷூரன்ஸ் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. தேய்மானம் கழிக்காமல் முழுத் தொகைக்கும் பாலிஸி எடுக்கும் வசதி வர இருக்கி றது.
இதன் மூலம் வாகனம் அல்லது வாகனத்தின் பாகங்களுக்கு சேதம் ஏற்படும்போது, முழு இழப்பீடு பெற் று புதிய பாகங்களை வாங்கிக் கொ ள்ள முடியும். இதேபோல், கார் விப த்தில் சிக்கி சேதம் அடைந் தால், புது கார் வாங்கும் அளவுக்கு முழுத்தொ கையும் இழப்பீடாக வழங்கும் பாலி ஸிகளும் விரைவில் வர இருக்கின் றன. இந்த கூடுதல் வசதிகளுக்காக சிறிது பிரீமியம் அதிகமாக கட்ட வேண்டியது வரும்" என்றார் ராமநாராயணன்.
கல்வி, செல்வம், வீரம்இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஒரு வாகனத்துக்கு டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி. புத்தகம், இன்ஷூரன்ஸ் ஆகிய மூன்றும்! ஆனால் நடைமுறையில் டிரைவிங் லைசன்ஸ் ஆர்.சி. புத்தகம் ஆகியவற் றை வைத் திருந்தாலும், பெரும்பாலானவர்கள் இன்ஷூரன்ஸ் வை த்துக்கொள்வதில் லை, அல்லது புதிப்பித்துக் கொள்வதி ல்லை. இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும் சிலரும் அது இல்லாவிட்டால் போலீ ஸார் பிடித்துக்கொள்வார்களே என்ப தால்தான் எடுத்திருப்பார்கள். ஆனால் அதன் அவசியம் என்ன, வாகனம் ஓட் டுபவர்களுக்கு அந்த ஒரு இன்ஷூரன் ஸ் மட்டுமே போதுமானதா என்பதைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லைஅது குறித்து விளக்கமாகப் பார்ப்போம்
மூன்றாம் நபர் பாலிசி
வாகனம் வைத்திருப்பவர்கள் முதலில் எடுக்க வேண்டியது, மூன்றா ம் நபர் பாலிசி (Third Party Insurance Policy). இதனுடைய அவசி யம் என்ன என்று பார்க்கலாம்நம் வாகனம் யார் மீதாவது மோதி விடுகிறதுஅதனால் அவருக்கு காயம் ஏற்பட்டுவிடுகிறது அல்லது உயிரிழந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்அல்லது நம் வாகனம் மோதி யாருடைய சொத்துக்காவது சேதம் ஏற்ப ட்டுவிடுகி றது என்று வைத்து க்கொள்வோம்இந்நிலையி ல் பாதிக்கப்பட்டவ ருக்கோ அவரது குடும்பத்துக்கோ நாம் இழப்பீடு கொடுத்தாக வேண்டும். அதனால் நமக்கு பெருத்த பண நஷ்டம் ஏற்படு ம். சிலருக்கு அந்த அளவுக்கு கொடுக்க பணமே இல்லாமல் போகலாம். இதுபோன்ற சமயங்களி ல் கை கொடுப்பதுதான் மூன்றாம் நபர் பாலிசி.
இந்த பாலிசி எடுத்திருந்தால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நபருக்கு இன் ஷூரன்ஸ் கம்பெனியே இழப்பீட்டைக் கொடுத்து விடும். சில நூறு ரூபாயை பிரீமியமாகக் கட்டுவதன் மூலம் பல லட்சங்களை இழக்காமல் இருக்கமுடியும். இருப்பினும் இந்த பாலி சியை சட்டப் படி எடுக்க வேண்டும் என் பதால்தான் எடுக்கிறார்களே தவிர அத ன் அருமை தெரிந்து எடுப்பதில்லை.
இதில் சட்டப்படியான பாலிசி மட்டும் என்றால் (Act Only Policy) மூன்றாம் நபரின் சொத்துக்கு ஏற்படும் பாதிப்புக்கு அதிகபட்சம் 6,000 மட்டும்தான் இழப்பீடு தரமுடியும். ஆனால் கூடுதல் பிரீமியம் கட்டுவதன் மூலம் டூ வீலரு க்கு 1 லட்சம் , காருக்கு 7.5 லட்சம் என இழப்பீட்டுத் தொகையை அதிகரித்துக் கொள்ள முடியும். மூன்றாம் நபர் பாலிசியில் ஒரு லட்ச ரூபாய்க்கான தோராய ஆண் டு பிரீமியம் 300 என்ற அள வில் தான் இருக்கும்.
ஓன் (own) டேமேஜ் பாலிசி
முன்னர் சொன்னது போல நம் வாகனம் மோதி மூன்றா ம் நபர் பாதிக்கப்பட்டால் மூன் றாம் நபர் பாலிசி எடுப்பதன் மூலம் அவருக்கு இழப்பீடை க் கொடுத்து விடலாம். ஆனால் அந்த விபத்தில் நமது வாகனமும் பாதிக்கப்பட்டிருக்குமே! அதற்கு இந்த தேர்ட் பார்ட்டி பாலிசிகள் மூல ம் இழப்பீடு கிடைக்காது. அதற்கு 'ஓன் டேமேஜ் பாலிசி' (Own Damage Polic) என்ற பாலிசியை தனியாக எடுக்க வேண் டும்.
இந்த பாலிசி எடுத்தால், விப த்து, மழை, வெள்ளம், தீ, திருட் டு உள்ளி ட்ட காரணங்களால் பாலிசிதாரரின் வாகனம் பாதி க்கப்பட்டால் இழப்பீடு கிடைக் கும். இந்த பாலிசியில், பாலிசி எடுத்தவரின் வாகனத்துக்கு ஏற்படும் சேதம், அதைச் சரி செய்ய அல்லது பாகங்களை மாற்ற ஆகும் செலவு ஆகிய வை வழங்கப்படும். இந்தப் பாலிசியை சட்டப்படி கட்டாயமாக எடுத் தாகவேண்டும் என்பதில்லை. அதனால் இதனை எடுப்பவர்கள் மிகக் குறைவு. இருப்பினும் இந்தப் பாலிசியையும் சேர்த்து எடுத்துக்கொ ண்டால் நமது வாக னத்தின் மூலம் பிறருக்கு ஏற்படும் இழப் பையும், நமது வாகன த்துக்கு ஏற்படும் நஷ்டத்தையும் ஈடு செய்துகொள்ளலாம்.
தொகுப்பு பாலிசி
மேற்கண்ட இரு பாலிசிகளை யும் தனித் தனியே எடுப்பதற்கு பதில் இவற்றின் பலன்களை ஒரு சேரக் கொண்ட தொகுப்பு பாலிசியை எடுத்துக் கொள்ளலாம்.
தனிநபர் விபத்து பாலிசி
சரி, மோதியதால் மூன்றாம் நபருக்கு இழப்பீடு கிடைத்துவிடும். வாகனத்தில் ஏற்பட்ட சேதத்துக்கும் இழப்பீடு கிடைத்துவிடும். ஆனால் வாகனத்தை ஓட்டிய நமக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது? வாகனத்தின் உரிமையாளருக்கு அசம்பாவிதம் ஏற்பட்டாலோ அல்லது உறுப்பு களை இழக்க நேர்ந்தாலோ இழப்பீடு தேவை எனில் அதற் கு தனிநபர் விபத்து பாலிசி (Personal Accident Policy) எடு ப்பது அவசியம். இந்தப் பாலிசி யை பொதுக் காப்பீடு நிறுவன ங்கள் ஜனதா தனிநபர் விபத்து பாலிசி என்ற பெயரில் வழங்கி வருகின்றன.
இந்த தனிநபர் விபத்து பாலிசியில் மூன்று வகை இருக்கிறது. விபத் தில் உயிரிழந்தால் மட்டுமே இழப்பீடு வழங்குவது ஒரு வகை. விபத் தில் மரணம் மற்றும் அடிபட்டால் இழப்பீடு வழங்குவது இரண்டாம் வகை. விபத்தினால் நிரந்தர அல்லது தற் காலிக ஊனம் ஏற்பட்டு, அதனால் பணிக் குச் செல்ல முடியவில்லை என்றால், அந் தக்கால கட்டத்தில் குறிப்பிட்ட தொ கை யை இழப்பீடாகத்தருவது மூன்றாம் வகை.
இந்த தனி நபர் விபத்து பாலிசியில் மருத் துவச் செலவு மற்றும் நஷ் டத்துக்கு ஏற்ப இழப்பீடு கொடுக்க மாட்டார்கள். விபத்து ஏற்பட்டால் பாலிசியில் குறிப்பிட்டபடி, இழப்பீட்டுத் தொகையைத் தந்து விடுவா ர்கள். தனிநபர் விபத்து இன்ஷூரன்ஸில், பாலிசித் தொகை அவரின் வருமானத்தை ப் பொறுத்து காப்பீடு நிறுவனத்தால் நிர் ணயி க்கப்படும்.
ஜனதா பாலிசியில் அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய்க்குதான் பாலிசி எடுக்கும் நிலை இருக்கிறது. ஆண்டு பிரீமியம் சுமார் 60-75 ரூபா ய்தான். பொதுவான தனிநபர் விபத்து பாலிசியில் ஒரு லட்ச ரூபாய்க் கு ஆண்டு பிரீமியம் சுமார் 130-150 ரூபாய்தான். இதில் கூடுதல் தொகைக்கு பாலிசி எடுத்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. பாலிசிதாரரின் வயது, பணியின் போது அவருக்குள்ள ரிஸ்க் போ ன்றவற்றைப் பொறுத்து பிரீ மியம் மாறுபடும். அலுவலக த்துக்குள் வேலை பார்ப்பவ ரைவிட, அடிக்கடி வெளியில் சென்று வருபவருக்கு பிரீமி யம் அதிகமாக இருக்கும்.
வொர்க்மேன்ஸ் காம்பன்சே ஷன் பாலிசி
பல இடங்களில் வாகனத்தி ன் உரிமையாளர் வாகனத்தை ஓட்ட மாட்டார். டிரைவர் வைத்திரு ப்பார்கள். அப்போது, டிரைவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் சட்டப்படி கொடுக்க வேண்டிய நஷ்ட ஈட்டுக்கு தனியே 'வொர்க்மே ன்ஸ் காம்பன்சேஷன்' பாலிசி எடுப்பது அவசியம். கூடுதலாக 25 பிரீமியம் செ லுத்தி இந்த பாலிசியை எடுத்துக்கொள் ள வேண்டும். இப்படி உரிமையாளரை தவிர மற்றவர்களையும் பாலிசியில் சேர்த்துக் கொள்ள முடியும்.
வாகனத்தில் எப்போதும் அதன் உரிமை யாளர் மட்டும் பயணம் செய்வதில்லை. பல நேரங்களில் உடன் குடும்பத்தினரும் செல்வார்கள். உரிமையாளருடன் குடும்பத்தினர் அடிக்கடி பயணம் செய்பவர்களா க இருந்தால், அவர்கள் பெயரையும் பாலிசியில் சேர் த்து தனிநபர் விபத்து பாலிசி எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசி யில் டிரைவரு க்கு அதிகபட்சம் 1 லட்சத்துக்கும், மற்றவர்களுக்கு 2 லட்சத்துக்கும் கவரேஜ் இருக்கும்.
மேலும், காரில் உறவினர்- நண்பர்கள்- அலுவலகத் தில் பணி புரிபவ ர்கள் என பலர் பயணம் செய்யக் கூடும் என்றால்., இவர்களுக்கு பய ணிகளுக்கான தனி நபர் விபத்து பாலிசி எடுத்துக் கொள்ள வேண் டும்.
மெடிக்ளைம் பாலிசி
அதெல்லாம் சரி, வாகன விபத்தில் சிக்கி உரிமையாளர் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டால் மேலே கூற ப்பட்ட பாலிசிகளில் இழப்பீடு கிடைக்காது. அதற்கு தனியே மெடிக் ளைம் பாலிசி எடுத்துக் கொள்வது அவசியம்.
இனி தேர்ட் பார்ட்டி, ஓன் டேமேஜ், தனி நபர் விப த்து, மெடிக்ளைம் பாலி சிகள் இல்லாமல் வண் டியை எடுக்கமாட்டீர்க ள்தானே?
மோட்டார் பாலிசியில்
எதற்கெல்லாம் இழப்பீடு இல்லை? எதற்கெல்லாம் கிளைம் இல் லை என்பதைத் தெரிந்து, அதற்கு ஏற்பச் செயல்படுவது நல்லது.
வாகனம் பிரேக் டவுன் ஆனால் இழப்பீடு இல்லை.
தற்கொலை எண்ணத்துடன் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்பட்டால் இழப்பீடு இல்லை.
தனிநபர் வாகன பாலிசியில், வாகனத்தை வாடகை டாக்ஸி அல்லது சரக்கு போக்குவரத்து வண்டியாக ப் பயன்படுத்தி, அப்போது விபத்து ஏற்பட்டு, இழப்பீடு கோரினால் இழப்பீடு இல்லை.
வாகனம் ஓட்டும் உரிமையாளர் அல்லது டிரைவரிடம் முறையான மற்றும் செல்லத்தக்க டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்றால் இழப்பீடு கிடைக்காது.
வாகனத்தை ஓட்டுபவர்கள் மது அல்லது போதைப் பொருள் மயக்க த்தில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் இழப்பீடுஇல்லை .
அனுபவம் ஆயிரம்
"இன்ஷூரன்ஸ் ஏஜென்டா இருக்குறவங்க பாலிசிதார ருக்கு நம்பிக் கையாவும், நாணயமாவும் நடந்துக்கணு ம். அந்த வகையில நான் என் னிக்குமே எனக்கு அதிக லாபம் கிடைக்கணும்னு சம்பந்தம் இல் லாத பாலிசிகளை அவங்க தலையில் திணிக்க மாட்டேன்.
எதுக்காகவும் வாடிக்கையாளர்களை காத்திருக்க வைக்க மாட்டே ன். சொன்ன நேரத்தில் சரியா போய் நின்னுடுவேன். நாலு கஸ்டமர் களை அலைஞ்சு திரிஞ்சு பிடிச்சுடலாம். அவங்களை நிரந்தரமா தக்க வச்சுக்கிறதுதான் அதை விடக் கஷ்டம். கஸ்டமருக்குத் தே வையான திட்டத்தை விளக்கிச் சொன்னா நம்மை விட்டுப் போகவே மாட்டங்க. இத்தனை வருசமா நான் இந்தத் தொழிலில் தாக்குப் பிடிச்சு நிக்குறதுக்கு காரணமும் இதுதான்!"

http://insurance.muruganandam.in/2012/08/auto-insurance-quotes.html?utm_source

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

அலுவலகத்தில் நீங்கள் பின்பற்றவேண்டிய கட்டளைகள்!

அலுவலகத்தில் நீங்கள் பின்பற்றவேண்டிய கட்டளைகள்!

 

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட நம் மன நிம்மதியை கெடுத்துவிடும். சிறப்பான அலுவலக சூழல் ஏற்பட நாம் கண்டிப்பாக பின்பற்றவேண்டிய பத்து வழிமுறைகள் இங்கே உள்ளன. இதனை பின்பற்றினால் அலுவலகத்தில் அனைவரும் விரும்பக்கூடிய சிறந்த மனிதராக நாம் பெயர் எடுக்கலாம். என் அலுவலக அனுபவங்கள் அதற்கு சாட்சி.

 

நல்ல வேலையை ரகசியமாக தேடுங்கள்!

தற்போது நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வேலை உங்களுக்கு திருப்தி இல்லாமல் இருக்கலாம். அதில் தவறொன்றும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் விருப்பம் இல்லாமல் ஒரு வேலையை செய்வது என்பது மிகப்பெரிய கொடுமையாகும். ஆனால் நீங்கள் வேறு வேலை தேடிக்கொண்டிருப்பதை பற்றி  அலுவலகத்தில்  மற்றவர்களுடன் விவாதிக்கவேண்டாம். உங்களுக்கு புதிய வேலை கிடைக்காத பட்சத்தில் நீங்கள் பழைய வேலையிலேயே தொடர நேரிடலாம். அப்போது நீங்கள் விருப்பம் இல்லாமல் வேலையில் நீடிக்கிறீர்கள் என்ற விஷயம் அலுவலகம் முழுவதும் தெரிந்திருக்கும். அது உங்கள் மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தலாம். 

 

கிசுகிசு, வதந்தி வேண்டாம்!

நீங்கள் ஒருநாளைக்கு எட்டு மணி நேரம் அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் செலவிடுகிறீர்கள். சக பணியாளர்களின் அந்தரங்க தகவல்கள், விருப்பு வெறுப்புகளை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் அதனை அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் அம்பலப்படுத்த வேண்டாம். அலுவலகத்தில் பேசக்கூடிய கிசுகிசு மிகவும் வேகமாக பரவக்கூடியது. முதுகுக்கு பின்னால் பேசக்கூடியவர், நம்பிக்கைக்குரியவர் அல்ல என்று பெயர் எடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.

 

செக்ஸ் சப்ஜெக்ட் பேசாதீர்கள்!

செக்ஸ் பற்றிய விஷயங்களை நீங்கள் அலுவலகத்தில் பேச வேண்டாம். செக்ஸ் என்பது உங்களுக்கும், உங்கள் மனைவிக்குமான அந்தரங்கம் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருக்கலாம். ஆனாலும் உங்கள் தனிப்பட்ட செக்ஸ் நடவடிக்கைகள் பற்றி அலுவலகத்தில் பேசவேண்டாம்.

 

மேலதிகாரிகளிடம் புகார் செய்யாதீர்கள்!

நீங்கள்  செய்யும் வேலையில் உங்களுக்கு பல மனக்குறைகள்  இருக்கலாம். ஆனால் அவற்றை அடிக்கடி மேலதிகாரிகளிடம் புகார்களாக எடுத்துச்செல்லாதீர்கள்  அல்லது எதிர்மறையாக விமர்சிக்காதீர்கள். அது நீங்கள் பார்த்துகொண்டிருக்கும் வேலையை மதிக்கவில்லை அல்லது வெறுக்கிறீர்கள் என்ற எண்ணத்தை மேலதிகாரிகளிடம் ஏற்படுத்திவிடும். நீங்கள் செய்யும் வேலையை வெறுக்கிறீர்கள் என்ற எண்ணம் சக ஊழியர்களிடையே அல்லது வாடிக்கையாளர்களிடையே ஏற்படுமானால் அது உங்களின் வளர்ச்சிக்கு தடையாக அமைந்துவிடும். மேலும் உங்களின் மேலதிகாரி உங்களுக்கு பதவிஉயர்வு வழங்க எதிர்ப்பு தெரிவிக்க அது காரணமாக அமைந்துவிடலாம்.

 

சம்பளம்  உஷ்!அது ரகசியம்!

உங்கள் அலுவலகத்தில் ஒரே மாதிரியான பணி செய்யும் அலுவலர்கள் வெவ்வேறு விதமான ஊதியம் பெறலாம். உங்கள் அலுவலகத்தில் மற்றவர்களைவிட நீங்கள் அதிகமான சம்பளம் பெறுகிறீர்களா? அல்லது குறைவான சம்பளம் பெறுகிறீர்களா? என்பதை பற்றிய விவரம் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அது மற்றவர்களுக்கும் தெரியவேண்டாம். நீங்கள் பெறும் சம்பளம் அதிகமாக இருந்தால் மற்றவர்கள் உங்கள் மீது பொறாமைப்படலாம். மற்றவர்களைவிட குறைவாக இருந்தால் உங்களை ஏளனம் செய்யலாம். எனவே உங்கள் ஊதியத்தை மற்றவர்களிடம் கூறாதீர்கள்.

 

நிதிநிலைமை பற்றி பேசவேண்டாம்!

ஊதிய விவரம் எவ்வாறு ரகஸியமானதோ, அதைப்போன்று உங்களின் குடும்ப நிதிநிலைமை பற்றியும் அலுவலகத்தில் பேசவேண்டாம். உதாரணமாக குடும்பத்தில் நிதி பிரச்சினை இருந்தால் கூட அதனை உங்கள் குடும்பத்துக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களின் பிரச்சினை. அது மற்றவர்களுக்கு தெரியவேண்டியதில்லை. நீங்கள் அவ்வாறு சொல்வதை சக ஊழியர்கள் விரும்பாமல் கூட இருக்கலாம். ஒன்றிரண்டு பேர் உங்களின் நிதிநிலைமை பற்றி அறிந்துகொள்வது உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் சக ஊழியர் அனைவருக்கும் தெரிந்தால் அது தேவையில்லாத வதந்திகளையும், கிசுகிசுக்களையும் அலுவலகத்தில் பரப்பிவிடலாம்.

 

குடும்ப பிரச்சினை அலுவலகத்தில் வேண்டாம்!

உங்களுக்கு குடும்பத்தில் நிறைய பிரச்சினை இருக்கலாம். நீங்கள் எப்போதும் வெறுப்பான மனநிலையில் இருக்கலாம். அல்லது திருப்தி இல்லாமல் இருக்கலாம். உங்கள் பிரச்சினை எதுவாகவும் இருக்கலாம். எந்த பிரச்சினைகளையும் நீங்கள் உங்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் அல்லது மருத்துவர்களுடனும் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். அலுவலகத்திற்கு அவற்றை கொண்டுசெல்லாதீர்கள்.

 

அரசியல் வேண்டாம்!

அரசியல் மக்களை பிரிக்கிறது. அலுவலகத்தில் அரசியல் பற்றிய விவாதங்களில் ஈடுபடாதீர்கள். நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்ற விவரத்தை கூறவேண்டாம். நாளிதழ்களில் வெளியான அரசியல் செய்திகள் குறித்து உங்கள் கருத்துக்களை கூறுதல், சக ஊழியர்களிடம் நீங்கள் வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்று விசாரித்தல் போன்றவைகளை தவிர்த்துவிடுங்கள். சில ஊழியர்கள் அரசியலை உணர்ச்சிபூர்வமாக அணுகக்கூடும். அதே ஊழியர்கள் உங்களின் தினசரி அலுவலகப் பணிகளுக்கு உதவி செய்பவராக இருக்கலாம். உங்களின் அரசியல் கருத்துக்கள் அவரை உங்களிடமிருந்து விலகச்செய்யலாம்.

 

உணர்ச்சியை பிறரிடம் வெளிப்படுத்தாதீர்கள்!

நீங்கள் ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் அதிகமான நேரத்தை செலவிடவேண்டியிருக்கும். வேலைப்பளு மிக அதிகமாக இருக்கலாம். அது உங்களுக்கு மன அழுத்தத்தை தரலாம். ஆனால் அதற்காக மற்றவர்கள் மீது நீங்கள்  கோபத்தைக் காட்டுவதை ஏற்க முடியாது.  உங்களின் உணர்ச்சிகளை அலுவலகத்தில் உள்ளவர்கள் மீது வெளிக்காட்டாதீர்கள். நீங்கள் இன்னும் பல ஆண்டுகள்  அவர்களுடன் பணிபுரிய வேண்டியதிருக்கலாம். ஒரு நாள் கோபம் பல ஆண்டுகள் நல்லுறவை பாதிக்கலாம். மேலும் உங்களுடைய உணர்வு வெளிப்பாடு சக ஊழியர்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடலாம். உங்கள் மீது  தவறான எண்ணங்கள் அலுவலகத்தில் உருவாவது தவிர்க்கப்படவேண்டும்.

http://writervijayakumar.blogspot.com/2012/11/10_12.html



--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

உங்கள் செல்லக் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக சில தகவல்கள்..

உங்கள் செல்லக் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக சில தகவல்கள்..

 

குழந்தைகளின் மொழியை எளிதில் புரிந்து கொள்ள இயலாது. அழுகையும், சிரிப்புமே அதன் பரிபாஷைகள். அதனை உணர்ந்து குழந்தைகளை வளர்ப்பது என்பது தனிக்கலை. குழந்தைகளின் செயல்படுகள் புரியாமல் சில நேரங்களில் தாய்மார்கள் எரிச்சல் அடைவதும் உண்டு. குழந்தைவளர்ப்பு குறித்து குழந்தை நல நிபுணர்கள் தரும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம்.

செல்லக் கொஞ்சல்

குழந்தைகள் முதலில் விரும்புவது தாயின் அரவணைப்பைதான். அந்த கதகதப்பு கிடைக்காத பட்சத்தில் அதற்காகவே அழுகையை தொடங்குகிறதாம். எனவே குழந்தை அழும் போது அதனை தூக்கி கொஞ்சினால் குழந்தையானது உடனே அழுகையை நிறுத்திவிடுமாம். அந்த நேரத்தில் குழந்தைக்கு உணவூட்டவோ, தாலாட்டவோ, மசாஜ் செய்யவோ, குளிப்பாட்டவோ செய்யலாம்.

தசைகளை வலுப்படுத்தும்

குழந்தையைத் தூக்கும்போது அதன் முதுகுப் புறமாக அதிகமாகப் பிடித்துத் தூக்கக்கூடாது, அது குழந்தையின் தண்டுவடத்தைப் பாதிக்கும் என்று சிலர் அறிவுரை´ சொல்வார்கள். ஆனால் உண்மையில்லை. பின்னால் பிடித்துத் தூக்குவது குழந்தையின் ரிப்ளெக்ஸ்´ திறனை மேம்படுத்துகிறது. பின்புற மற்றும் கழுத்துத் தசைகளையும், தண்டுவடத்துக்குத் துணையாக உள்ள தசைகளையும் வலுப்படுத்துகிறது

இயல்பாய் பாலூட்டுங்கள்

குழந்தைக்குப் பாலூட்டும்போது அதை மார்பகத்தை நோக்கி அழுத்த வேண்டாம். அஅப்போது குழந்தை அதன் இயல்பின்படி தனது தலையைப் பின்னோக்கித் தள்ளும்.. எனவே கைகளில் லேசாக ஏந்தி அதற்கு ஏற்ற வகையில் பாலூட்டுவதே சிறப்பானது. குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதையும் தடுக்கும். ஒரு சிலர் படுத்துக்கொண்டே பாலூட்டுவார்கள். இது சில சமயங்களில் ஆபாத்தாக முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

வெது வெதுப்பான நீர்

இளந்தாய்மார்கள் பலர் குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது என்று தெரியாமல் திகைத்துப் போகிறார்கள். அந்நேரத்தில் குழந்தை அழுதால் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிப் போகிறார்கள். பெரியவர்கள் அல்லது கணவரின் துணையோடு குழந்தையை குளிப்பாட்டலாம். எப்பொழுதுமே வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்ட வேண்டும். குளித்த பின் மெல்லிய உலர்ந்த துணியை பயன்படுத்தி நன்றாக துடைத்து எடுப்பது நல்லது.

மெல்லிய ஆடைகள்

குழந்தைகளுக்கு காற்றோட்டமான, மெல்லிய துணி ஆடைகளை அணிவிக்கலாம். அது குழந்தை யின் இயல்பான உடல் வெப்பநிலையைப் பராமரிக்க உதவுவதுடன், புற வெப்பநிலையிலிருந்தும் பாதுகாக்கும் குழந்தையின் இடுப்பு ஆடையை உடனுக்குடன் மாற்றத் தவறுவதால் நோய்த் தொற்று ஏற்படலாம். இன்று நவீன டயாப்பர்கள்´ வந்துவிட்டன. குழந்தையின் சருமத்தைச் சுத்தமாகவும், உலர்வாகவும், வாசனையற்றும் வைத்துக்கொள்வது முக்கியம். அது நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும்.

நேர்மறை எண்ணங்கள்

குழந்தையை தூங்கவைக்க ஒரு சிலர் பகீரத பிரயத்தனம் செய்வர். வெளியே வேடிக்கை காட்டுவது, காரில் அழைத்துச் செல்வது என பணத்தையும், நேரத்தையும் வீணாக்குவார்கள். அது தேவையற்றது என்கின்றனர் நிபுணர்கள். குழந்தையை அதன் சக்கர நாற்காலியில் வைத்து மெதுவாக உருட்டலாம். அப்போது ஏற்படும் மெல்லிய அதிர்வு, நகர்வுக்குக் குழந்தை பழகி தூங்கத் தொடங்கி விடும்.

குழந்தையின் நெற்றி, நெஞ்சு அல்லது பின்புறத்தில் மெதுவாகத் தட்டுவது ஒரு தூண்டலாகச் செயல்பட்டு குழந்தையைத் தூக்கத்தில் ஆழ்த்துகிறது. அப்போது எழும் ஓசையும் பாசிட்டிவ்´வான பலனைத் தருகிறதாம்.

முத்தமிடுங்கள்

குழந்தைக்கு காய்ச்சல் அடிப்பதை உணர தொட்டுப் பார்க்காமல், குழந்தையின் கழுத்தின் பின்புறம் முத்தமிடுவதன்மூலம் அதன் உடல் வெப்பநிலையைத் துல்லியமாக அறியலாம். உடல் சூடாக இருந்தால் நனைத்துப் பிழிந்த துணியை குழந்தையின் தலையில் போடுவதன் மூலம், மருத்துவச் சிகிச்சை அளிக்கும்வரை அதன் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும். பின்னர் குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்.

http://www.thamilan.lk/news.php?nid=28168

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சுவனத்திற்கு செல்லும் எளியவழிகள்!

சுவனத்திற்கு செல்லும் எளியவழிகள்!

கல்வி கற்க புறப்பட்டால் சுவனத்தின் பாதை எளிதாகும்!
யார் கல்வியைத் தேடி பயணமாகின்றானோ அவனுக்கு சுவனத்தின் பாதையை அல்லாஹ் எளிதாக்கிவிடுகிறான். (முஸ்லிம்)

சுவனத்தில் மாளிகை வேண்டுமா? பள்ளியைக் கட்டுங்கள்!
"எவனொருவன் அல்லாஹ்வுக்காக பள்ளியொன்றை கட்டுகிறானோ, அவனுக்கு அதே போலொரு வீட்டை அல்லாஹ் கட்டுகிறான்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

சுவனத்தில் அநாதைகளை ஆதரிப்போரின் உன்னத நிலை!
'நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்' என்று கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும் நபி (ஸல்) விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட) சைகை செய்தார்கள். (புகாரி)

நோய் விசாரிக்கச் சென்றால் சுவனத்தில் ஒரு தோட்டம்!
ஒரு முஸ்லிம் நோயுற்ற முஸ்லிமை விசாரிக்கக் காலையில் சென்றால் அவருக்காக ஏழாயிரம் வானவர்கள் மாலை வரை அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள். அவ்வாறே மாலையில் நோய்விசாரிக்கச் சென்றால் மறுநாள் காலை வரை ஏழாயிரம் வானவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள். அவருக்கு சுவனத்தில் ஒரு தோட்டம் இருக்கும். (திர்மிதீ)

நரகம் ஹராமாக்கப்பட வேண்டுமா?
'எவர் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்பதை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி கூறுவாரோ அவருக்கு நரகம் ஹராமாக்கப்பட்டு விடும்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)

மக்களை அதிகமாக சுவனத்தில் சேர்ப்பவைகள்!
மக்களை சுவனத்தில் சேர்ப்பதில் அதிகக் காரணமாக விளங்குவது எது? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது 'இறையச்சமும் நற்குணமும் தான்' எனக் கூறினார்கள்' (திர்மிதீ)

உண்மை பேசுவது சுவனத்திற்கு வழிகோலும்!
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும்.(புகாரி)

கோபத்தை அடக்கினால் சுவனத்து கண்ணழகிகளில் விரும்பியவரை மணக்கலாம்!
யார் கோபத்தை வெளிப்படுத்தும் சக்தியுள்ள நிலையில் அதை அடக்குகின்றாரோ அவரை அல்லாஹ் மறுமையில் அனைத்துப் படைப்பினங்களுக்கும் மத்தியில் அழைத்து ஹூருல் ஈன்களில் – சுவர்க்கத்து கண்ணழகிகளில் தாம் விரும்பியவரை அனுபவித்துக்கொள்ளக்கூடிய உரிமையை வழங்குவான் (திர்மிதீ)

பெற்றோரைப் பேணுவதால் சுவனம் கிடைக்கும்!
'அவன் கேவலப்பட வேண்டும்' என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், 'தமது பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து (அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை இழந்தவன்' எனக் கூறினார்கள். (முஸ்லிம்)
இரண்டைப் பேணுவதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் நமக்கு சுவர்க்கத்திற்கு பொறுப்பேற்பார்கள்!
"எவர் தன் நாவையும், மருமஸ்தானத்தையும் பாதுகாப்பதாக எனக்கு வாக்களிக்கின்றாரோ அவருக்கு நான் சுவனத்தைப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களுடன் சுவனத்தில்!
"நானும் அனாதைக்கு அபயமளிப்பவரும் சுவனத்தில் இவ்வாறு இருப்போம் என நபிகள் (ஸல்) அவர்கள் சுட்டு விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்" (புகாரி)
நான்கு விசயங்கள் ஒரே நாளில் ஒருவர் செய்தால் அவர் சுவனம் சென்று விட்டார்!
எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.

விரும்பிய வாயிலின் வழியாக சுவனம் செல்ல!
எவர் ஒழுச் செய்ததன் பின் 'அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சுவனத்தைத் தவிர வேறு கூலியில்லை!
ஓர் உம்ரா செய்வது அடுத்த உம்ரா செய்யும் வரையிலான பவத்திற்குப் பரிகாரமாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. (முஸ்லிம்)

சுன்னத்தான தொழுகைகளைப் பேணினால் சுவனத்தில் மாளிகை!
"ஒரு நாளைக்கு 12 ரக்அத்துகள் நஃபிலாக (உபரியாக) யார் தொழுது வருகிறாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படும்".



--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com