மறுமை வெற்றியாருக்கு?
அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்..
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளும் ஒரு வெற்றியை நோக்கியே இருக்கின்றது. அதை நோக்கியே அவன் தனது பயணங்களை அமைத்துக் கொள்கின்றான். அதற்க்காக தனது முழு முயற்ச்சியையும் அர்ப்பணிக்கின்றான். அந்த வெற்றியின் ருசியை கூடிய விரைவில் தான் சுவைக்க வேண்டும் எனவும் ஆவல் கொள்கின்றான். அதை முன்னோக்கியே தனது ஒவ்வொரு செயலையும் அமைத்து கொள்வதை நாம் காண்கிறோம்.
மற்ற மனிதர்களின் வெற்றி இலக்கிலிருந்து முஸ்லிம்களின் இலக்கு முற்றிலுமாக மாற்றம் பெறுகின்றது. ஒரு முஸ்லிமுக்கு உன்மையான வெற்றியென்பது மறுமையில் அவன் தனது இறைவனுக்கு முன்னால் நீதி விசாரனைக்காக நிறுத்தப்படும் பொழுது கிடைக்கக் கூடிய வெற்றியே. அல்லாஹ் தன்னுடைய திருமறையில் இதை சொல்லிக் காட்டுக்கின்றான்:
ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 3:185)
அந்நாளில் வேதனையிலிருந்து காக்கப்படுவோர்க்கே அவன் அருள் புரிந்தான். அதுவே தெளிவான வெற்றி. (அல்குர்ஆன் 6:16)
எவரது எடைகள் கனமாகி விட்டனவோ அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 23:102)
ஒவ்வொரு முஸ்லிமுடைய தெளிவான குறிக்கோள் இந்த மறுமை வெற்றியேயாகும். ஏனெனில் இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானது கிடையாது. ஆனால் மறுமை வாழ்க்கையோ முடிவில்லா நிரந்தரம். இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்ற முடிவு நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அதை சுவைத்தே ஆக வேண்டும். உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் பிறந்த அனைவரும் இறந்து போனார்கள்…. நேற்று இருந்தவன் இ ன்று இல்லை….. இன்று வாழக்கூடியவர்கள் அனைவரும் நிச்சயம் ஒரு நாள் மரணித்தே தீருவார்கள்…. அல்லாஹ் ஏற்படுத்திய நியதி இது …. அது நிச்சயம்….
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (அல்குர்ஆன் 21:35)
இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். (அல்குர்ஆன் 55:26)
இந்த நிச்சயிக்கப்பட்ட மரணத்திற்க்கு பிறகு ஒரு விசாரணை உண்டு; அதன் முடிவில் ஒரு நிரந்தர நல்வாழ்வோ (சுவர்க்கம்) அல்லது நிரந்தர துர்வாழ்வோ (நரகம்) நிச்சயம் என நம்பும் முஸ்லிம் கட்டாயம் அந்த விசாரணையில் வெற்றி பெறுவதையே உன்மையான வெற்றியாக கருதுவான். அது தான் சத்தியமான உண்மை.
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் இந்த நிலையான மறுமை வெற்றி யாருக்கு என பல இடங்களில் குறிப்பிட்டுக் காட்டுகின்றான். அவற்றில் சிலவற்றை உற்று நோக்குவது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
ஈமான் கொள்வது
நிச்சமயமாக அனைத்து விடயங்களை விடவும் ஒரு மனிதனின் ஈமான் மறுமை வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது…. இது ஒரு முஸ்லிமுடைய அடிப்படை நம்பிக்கைகளில் உள்ளாதாகும்.
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அல்குர்ஆன் 23:1)
அல்லாஹ் எதையெல்லாம் நம்ப வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளானோ, அவைகளை அப்படியே நம்புவது ஈமானில் உள்ளதாகும்…. அல்லாஹ்வை நம்புதல், வானவர்களை நம்புதல், விதியை நம்புதல், வேதங்களை நம்புதல், நபிமார்களை நம்புதல், இறுதி நாளை நம்புதல் போன்றவை இதில் அடங்கும். ஈமான் கொண்டவர்களை அல்லாஹ் வெற்றியாளர்கள் என கூறுகிறான்.
அலிஃப், லாம், மீம். இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி. அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். அவர ்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர் வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 21:1-5)
கொன்ட ஈமானில் உறுதி
எல்லா நிலைகளிலும் ஏற்றுக்கொண்ட ஈமானில் உறுதியாக இருப்பது மிகவும் அவசியமானதாகும். உறுதியான நம்பிக்கைக் கொண்டு, அதில் நிலையாக நிற்க கூடியவர்களையே அல்லாஹ் வெற்றியாளர்கள் என கூறுகிறான்.
வானத்திலிருந்து அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும், பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தரக் கூடியதோ நிலத்தில் தங்கி விடுகி றது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான். (அல்குர்ஆன் 13:17)
ஈமானிய உறுதிக்கு சில உதாரணங்களையும் நம்முடைய படிப்பினைக்காக அல்லாஹ் தன்னுடைய திருமறையில் சொல்லி காட்டுகின்றான்.
பிர்அவ்னின் மனைவி, மர்யம் (அலை)
உலக மூஃமின்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இவ்விரு பெண்களையும் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான். இதற்கு அவர்கள் உறுதியான் ஈமான் கொண்டு அதில் நிலையாக நின்றதை அல்லாஹ் காரணமாகக் கூறுகிறான். துன்பங்கள், துயரங்கள் ஏற்பட்ட போதும் தமது இறைவனையே சார்ந்தவர்களாக அவர்கள் இருந்தது உறுதிமிக்க ஈமானுக்கு எடுத்துக்காட்டு……
'என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். (அல்குர்ஆன் 66:11)
இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார். (அல்குர்ஆன் 66:12)
பிர்அவ்ன் vs மந்திரக்காரர்கள்
மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த அற்புதத்தை நேரடியாகக் கண்ட பிர்அவ்னுடைய மந்திரக்காரர்கள், உடனடியாக ஈமான் கொள்கின்றனர். ஈமான் கொணட்து மட்டுமல்லாது, கொடியவனான பிர்அவ்ன் அவர்களை வேதனையை கொண்டு எச்சரிக்கும் போதும் கொண்ட ஈமானில் உறுதியாக அல்லாஹ்வையே சார்ந்து நின்றதை அல்லாஹ் பின்வருமாறு சொல்லிக் காட்டுகின்றான்.
உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, 'மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்' என்றனர். 'நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையான வரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்' என்று அவன் கூறினான். 'எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்' என்று அவர்கள் கூறினார்கள். 'எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப் பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பி விட்டோம். அல்லாஹ்வே சிறந்தவன்; நிலையானவன்' (என்றும் கூறினர்.) (அல்குர்ஆன் 20:70-73)
ஈமான் கொண்டு சில பொழுதுகளே ஆன போதும் அவர்கள் காட்டிய உறுதி நம் அனைவருக்கும் மிகச்சிறந்த படிப்பினை. 10 வருட முஸ்லிம், 20 வருட முஸ்லிம், பிறந்ததிலிருந்து முஸ்லிம், தலைமுறை தலைமுறையாக முஸ்லிம் என பெருமைபட்டுக் கொள்ளும் நாம், சோதனைகள் ஏற்படும் போது நம்முடைய ஈமானில் உறுதியாக இருக்கின்றோமா என்பதை சிந்திக்க கடைமைப்பட்டுள்ளோம். சிறு சோதனை ஏற்பட்டால் கூட சகிக்காமல் பச்சையான ஷிர்க், பித்அத் என வழிதவறுவோர் எத்தனை பேர்?
உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. 'அல்லாஹ்வின் உதவி எப்போது?' என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது. (அல்குர்ஆன் 2:214)
எவ்வளவு தான் துன்பங்களும் சோதனைகளும் வந்தாலும், அவையெல்லாம் நிரந்தரமல்ல…. சகித்துக் கொண்டு ஈமானிய உறுதியோடு இருந்தால் அல்லாஹ்விடமே மகத்தான வெற்றி உள்ளது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
நபிமார்களின் சமூகம்:
துன்பங்களுக்கும் சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்ட போதும், தங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட போதும், நபிமார்களும் அவர் உடனிருந்தவர்களும் அல்லாஹ்வையே முற்றிலும் சார்ந்திருந்த்து அவர்களின் ஈமானின் வலிமையை பறைசாற்றுகின்றது.
'அல்லாஹ்வையே சாராதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்களுக்கு எங்களின் பாதைகளைக் காட்டி விட்டான். நீங்கள் எங்களுக்கு அளிக்கும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோம். உறுதியான நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்' (என்றும் கூறினர்.) 'உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்' என்ற ு (ஏக இறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர். 'அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமி யில் குடியமர்த்துவோம்' என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இது, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது. (தூதர்கள்) வெற்றி பெற்றனர். பிடிவாதம் பிடித்த ஒவ்வொரு அடக்குமுறையாளனும் இழப்பை அடைந்தான். (அல்குர்ஆன் 14:12-15)
இறையச்சம் (தஃக்வா)
படைத்த இறைவன் நம்மை எல்லா நிலைகளிலும் கண்கானித்துக் கொண்டிருக்கின்றான் என சிந்திக்கும் மனிதன் தவறுகள் செய்வதிலிருந்தும், தனது இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்தும் தன்னை தற்காத்துக் கொண்டு மறுமை வெற்றியை நோக்கி விரைந்து செல்கிறான்.
மறைவான நிலையிலும், வெளிப்படையான நிலையிலும் மனிதன் இறை விருப்பத்திற்க்கு எதிரான காரியங்கள் செய்வதை விட்டும் இந்த தஃக்வா அவனை காக்கின்றது. அதன் மூலம் நிரந்தரமான வெற்றியின் பக்கம் அவனை கூட்டிச் செல்கிறது.
''அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்" என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். (அல்குர்ஆன் 7:128)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப் போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 5:35)
உங்கள் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும், சோதனையே. அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது. உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்! (நல் வழியில்) செலவிடுங்கள்! அது உங்களுக்குச் சிறந்தது. தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோர் தான் வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 64:15-16)
அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் முற்றிலுமாக கட்டுப்படுவது
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். இதன் மூலமே இறையருள் கிட்டும், சொர்க்கம் கிடைக்கும். இதில் அலட்சியமாக இருந்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் படாவிட்டால் செய்கின்ற நல்லறங்கள் அனைத்தும் பாழாகி விடும்.
அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள். (அல்குர்ஆன் 5:56)
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார். (அல்குர்ஆன் 33:70-71)
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விடயத்தில் கட்டளையிட்டுவிட்டால் நம்முடைய சுய விருப்பு வெருப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு முற்றிலுமாக கட்டுப்பட வேண்டும்.
அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது 'செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24:51-52)
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் தான் முஃமின்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் படாதவர்கள் காஃபிர்கள். இறைத் தூதரின் விளக்கமும் வஹீ தான். திருக்குர்ஆன் மட்டுமின்றி அதற்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் பின்பற்றுவது முஸ்லிம்களின் மீது கட்டாயக் கடமை.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன் 8:46)
இது எந்த அளவிற்கு குர்ஆனில் வலியுறுத்தப்படுகின்றது என்றால், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட மறுத்தல் அது இஸ்லாத்தை விட்டே ஒருவனை வெளியேற்றும் காரணமாக கூறப்படுகின்றது.
(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:65)
அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் அகந்தை கொண்டவனாகவும், அதைச் செவியுறாதவனைப் போலவும், தனது காதுகளில் அடைப்பு உள்ளது போலவும் புறக்கணிக்கிறான். அவனுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக! (அல்குர்ஆன் 31:7)
நன்மையை ஏவுவது…. தீமையை தடுப்பது
ஒரு சிறந்த சமுதாயமாக (கைர உம்மத்) அல்லாஹ் உருவகப்படுத்துவது நிச்சயம் நன்மையை ஏவி தீமையை தடுக்கக் கூடியவர்களையே.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)
நன்மையை ஏவுவது எவ்வளவு முக்கியமோ அதை விட அதிகமான முக்கியத்துவத்தை தீமையை தடுக்க நாம் பயன்படுத்த வேண்டும். நாங்கள் நன்மையை மட்டுமே ஏவுவோம், தீமையை தடுப்பதனால் பகைமை ஏற்படுகிறது, ஒற்றுமை குலைகிறது என சப்பைக் கட்டு கட்டி அதை அலட்சியம் செய்வர் இன்றைய சமுதாயத்தில் பெறுகி விட்டனர். இது நிச்சயம் அல்லாஹ்வுடைய தூதர் காட்டித் தந்த வழிமுறைக்கு முற்றிலும் மாற்றமான சிந்தனையாகும்.
எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாததினால் ஒரு கட்டளையை மட்டும் செயல்படுத்துவோம், ஆனால் அதே நேரத்தில் மற்றொன்றை செய்தால் நாங்கள் தனிமைப் படுத்தப்படுவோம் என சாக்கு போக்கு கூறி தீமைக்கு எதிராக களமிறங்காமல், குரல் கொடுக்காமல், பிரச்சாரம் செய்யாமல் இருப்பது, அந்த தீமைகளில் அல்லாஹ் அவர்களின் பெயர்களையும் சாட்டிவிடுவான் என்பதில் எச்சரிக்கையாக இருக்கட்டும்.
நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் 3:110)
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர். (அல்குர்ஆன் 3:114)
--
No comments:
Post a Comment