Saturday, November 16, 2013

சுலபமாக சுக‌ப்பிரசவத்திற்கான வழிகள்..

சுலபமாக சுக‌ப்பிரசவத்திற்கான வழிகள்..

கர்ப்பிணிகள் 7 மாதத்திற்கு பிறகு நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க வேண்டும்..

காரமான உணவு உண்பது சுகப்பிரசவத்தை எளிதாக்குகிறது. ஆனால் இது போன்ற உணவை சாப்பிடுவதன் மூலம் குமட்டல் அல்லது நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் காரமான உணவை சாப்பிவதை தவிர்க்கவும்.

தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும். அவ்வாறு அதிகமாக தண்ணீரை குடிப்பது கருப்பையில் நீரை தக்கவைத்து கொள்கிறது.

  அன்னாசி, பப்பாளி, மாம்பழம் போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். இவற்றில் ப்ரோமிலெய்ன் அதிகமாக இருக்கிறது, இவை கருப்பை வாயில் ஏற்படும் பாதிப்பை நீக்கி மென்மையாக்குகிறது.

தினமும் சில சிறிய உடற்பயிற்சிகளை செய்யவும். உடற்பயிற்சி செய்யாதவர்கள், தினமும் படிகட்டுகளில் அரை மணிநேரம் ஏறி இறங்கலாம்.

தினமும் காலையிலும் மாலையிலும் நடக்கவும். இவ்வாறு செய்வதால் உடல் சீரான நிலையுடனும் நெகிழும் தன்மையோடு மாறுவதால் சுகப் பிரசவம் எளிதாக இருக்கும்.

உங்களை எப்போதும் மனஅழுத்தமில்லாமல் சந்தோஷத்தோடு வைத்துக் கொள்ளவும்.

  மாதுளை பழத்தை தினமும் சாப்பிடவும். இது உங்கள் உடம்பில் மற்றும் உங்கள் குழந்தையின் உடம்பில் உள்ள இரத்த அணுக்களை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

  7 மாதத்திற்கு பிறகு பாலில் சில பூண்டுகளைப் போட்டு கொதிக்க வைத்து குடிக்கவும்.

தினமும் தூங்கவதற்கு முன் இளஞ்சூடான நீரில் குளிக்கவும். இவ்வாறு குளிப்பதால் மனஅழுத்தம் மற்றும் உடல் சோர்வுகள் நீங்கும். இவ்வாறு செய்வதன் மூலம் சுகப்பிரசவத்தில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்று எடுக்கலாம்.

http://pettagum.blogspot.in/2012/10/blog-post_2590.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: