Monday, February 18, 2013

அட இத கண்டிப்பா படிங்க சிக்கன் பிரியர்களே

அட இத கண்டிப்பா படிங்க சிக்கன் பிரியர்களே

பிராய்லர் கோழி தற்போது கிலோ Rs.450/- க்கு விற்பனை செய் யப்படு வதன் நோக்கம் தெரியுமா ?

பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லா த்தை யும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் நாம் ஹலால் என்று முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம் இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்க ளே
  இன்னும் சில நாட்களில் கோழி கறியி னால் வரப்போகும் பிரச்ச னை களால் Rs.120/-இல் இருந்து Rs.40/- நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இவர்களின் திட்டத்தின்படி Rs.180/- என்று விலையை உயர்த்தி, பிறகு Rs.120/- என்ற சமநிலை யை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர்
மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புக ளில் இருக்கும் சத்து முற்றிலு ம் அழிகிறது, மஞ்சள் காமா லை, இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிக ளின் எண்ணிக்கை யை அடு க்கலாம். ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைக ளை அதிக மாக சாப் பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்ச னை அதிகமாக பரவி வருகிறது. அவர்கள் படும் கஷ்ட ங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல் வாதிகள் வியாபார நோக்கத்துடன் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக் கொள் கின்றனர்.

நாமக்கலின் HEALTH CARE ORGA NIZATION எவ்வளவோ முயற்சி எடுத்தும் அவர்களால் இந்த உண்மையை ஆனந்த விகட ன் புத்தகத் தில் ஆறாம் திணை என்ற தொகுப் பில் மட்டும் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந் தது .
உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய் கனிக ளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமி ழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து, புறங்கை யில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன் குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங் களில் பேசுகின்றன.
இன்றைக்கு அசைவம் சாப்பிடு வதுபற்றி இருவேறு கருத்துக ள் இரு க்கின்றன. ஒன்றுஅசை வம் சாப்பிட்டால், உடம்பு வளரும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவதுஅசை வம் சாப் பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண் மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கி றது என்பதே சரி!
அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடு த்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கிய வர்களில் 99 சதவிகிதத்தின ரும், உலகை உலுக்கி மாற்றிய 'மைக் ரோசாஃப்ட்', 'ஆப்பிள்' முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள் ள புரதமும் சில நுண் சத்து க்களும் பொதுவாகக் காய், கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம் தான் இரும்புச் சத்து இரு க்கிற து. ஆகையால், அசைவத்தின் ஆற்ற லைக் கேள்விக் குறியாக்க வேண்டியது இல்லை. ஆனா ல், அசைவம் மட்டுமே போது மா? அசை வத்தை எப்படிச் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டு ம் என்பது தான், முக்கியமான ஒரு கேள்வி!
ஏனென்றால், போருக்குப் போகும் வீர ன் சாப்பிட்டது, காரில் போகும் சுகவாசிக்கு அப்படியே சரிப்படாது. அன்றுமுதல் இன்று வரை கட்டு மரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அள வு, நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் 'ஃபிஷ் ஃப்ரை' ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீ யருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணு ம் அளவைத் தீர்மானிப்பதில் எப்போ துமே முக்கிய மான பங்குண்டு. அசை வம் சாப்பி டலாம். ஆனால், அள வாகச் சாப்பிடு ங்கள். ஐந்து பேர்கொ ண்ட ஒரு குடும்ப ம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சி யோ, ஒரு கிலோ கோழிக் கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமா னது. அதையும்கூட இரண்டு நாட்களாகப்பிரித்து எடுத்துக் கொண் டால், இன்னும் சிறப் பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள் குறைந்தது ஒரு வேளை யே னும் வயிற்றுக்கு ஓய்வு கொடு த்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்து தான். எல்லாவற்றுக்கு மே ஒரு புரிதல் தேவைப்படு கிறது!
அட்டகாசமான கறி விருந்து சாப்பிட் டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளி மையாக அன்றைய சாப்பாட்டை முடி த்துக்கொள்ளும் வழக்கம் நம் முன் னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவை யான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பை க் கரைக்கும் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள் நம் முன்னோ ர்கள். நாம் எதை அறிந்து வைத்திருக் கிறோம்?
மாமிசம் சாப்பிடும்போது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்க வேண்டும் என்கிற து தமிழ் மருத்துவம். இது வரை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கரையிலும் இந்த க் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சமை க்கப்பட்டது கிடையாது. ஆனால், புதி தாக வெளிநாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள பன் னாட்டு கறிக் கடைகள் பொரித்தும் அவி த்தும் தரும் கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க முடியாது தெரியுமா? சரி, கண்ணாடிக் குளிர் அறைகளில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பி டுகிறீர்களே அந்தக் கறி யில் என்னென்ன எல்லாம் கலந்து இரு க்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்து கொள்ளுங் கள்நூற்றுக்கணக்கான ரசாயனக் காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு. குறிப்பாக, புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவு கள் வைக்கும் சோடி யம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்ட மேட் உப்புகள் உண்டு.

கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரை தேடி வளர்ந்த கோ ழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இரு க்கக் கூடாது. கோழிக் கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது. சாதாரண சளி, இருமல், மந்தம் போக்கக் கூடிய து; உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண் மையைப் பெருக்கக் கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச் சத்து அதிகம்; வைட்ட மின் பி 12 சத் தும் அதிகம். உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன் ஆரோக் கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல் லை என்கிறது நவீன உணவியல்.
நம் ஊரில் கருங்கோழி எனும் நாட் டு இனக் கோழி இன்றும் இரு க்கிற து. காலில் அதிக மயிருடன் ஷூ போட்டதுபோல் மிடுக்காக இருக் கும். அந்தக் கோழியின் சதைப் பகு தியும்கூட கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். தமிழ் மருத்துவம் தசை சூம்பி வலுவிழந்து இருக்கும் பக்க வாத நோயினருக்கும், பிற தசை நோயினருக்கும் இந்தக் கோழி யைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெடுங்கா லமாக உரக்கச் சொல்லிவருகிறது. நாம் இப்போது சாப்பிடும் கோழி இறை ச்சி யின், பின்னணி குறித்து, 'கூவாத கோழி யும், குடை சாயும் இறை யாண் மையும்' என்ற புத்த கத்தில் அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிர வைப்ப வை.

'பிராய்லர் கோழிகளின் செழுமை யான தோற்றத்துக்காக அளிக்கப் படும் 'ரோக் ஸார்சோன்' (Roxar- sone) என்ற மருந்து மனிதர்களு க்குப் புற்றுநோயை உருவா க்க வல் லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும், இந்த பிராய் லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொ டர்ந்து உட்கொ ள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்ப தாகப் பல்வேறு ஆய்வு கள் தெரிவிக்கின்ற ன!" என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்கைப் பட்டியல் அபாய கரமானது

http://orathanadukarthik.blogspot.in/2013/02/blog-post_6290.html

--
*more articles click*
www.sahabudeen.com


No comments: