Monday, February 11, 2013

நீங்கள் இதுவரை அறியாத கறிவேப்பிலையின் மருத்துவ பலன்கள்

நீங்கள் இதுவரை அறியாத கறிவேப்பிலையின் மருத்துவ பலன்கள்

   

இந்தியாவில் அதுவும் செளத் இந்தியாவில் உணவில் மிக முக்கியமாக சேர்க்கப்படுவது கறிவேப்பிலை. இதை உணவில்   வாசனையை அதிகரிக்க மட்டுமே பயன்படுகிறது என்று பலர் கருதிக் கொண்டு  அதில் உள்ள மருத்துவ பலன்களை அறியாமல் , சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள்.

 

கறிவேப்பிலையின் மருத்துவபலன்கள் :

 

-மலச்சிக்கல் பிரச்சனைக்கு கறிவேப்பிலை மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. சாப்பிட்ட பிறகு கோக் போன்றவைகளை க்டித்து விட்டு அடுத்த நாள் டாய்லெட்டில் மலம் கழிக்க ஒரு மணி நேரமாக  கஷ்டப்படுபவர்கள் அவர்கள் உணவிற்கு பின் மோரில் சிறிது பெருங்காயப் பொடி, கறிவேப்பிலையை போட்டு  அந்த இலையையும் சேர்த்து  குடித்து வந்தால் அது மலம் மிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலை நீக்கிவிடும்

 

- உணவு செரிமானத்திற்கும் மயக்கத்தில் இருந்து தெளிவதற்கும் இது மிகவும் பயன்படுகிறது. கறிவேப்பிலையை அரைத்து ஜூஸ் எடுத்து அதில் சிறிது எலுமிச்சை பழ ஜூஸை சில துளிவிட்டு சிறிது அளவு சுகர் சேர்த்து அருந்தி வரலாம்.

 

- சிறிது இலையை தினசரி மென்று தின்று வந்தால் அது உங்கள் உடல் எடையை  குறைக்க உதவுகிறது.

 

- கண்பார்வைக்கு கறிவேப்பிலை மிகவும் உதவுகிறது இதனை சாப்பிட்டு வருவதன் மூலம்  cataract யை தடுக்க முடியும்.

 

தலை முடி கருகருவென இருப்பதற்கும் நரை வராமல் தடுப்பதற்கும் இது மிகவும் பயன்படுகிறது.. இப்போது எல்லாக் கடைகளிலும் கறிவேப்பிலை பொடி கிடைக்கிறது அதை நாம் சாதத்திலும் நாம் சுடும் தோசை வகைகளிலும் சேர்த்து வரலாம். அதுமட்டுமல்லாமல் கறிவேப்பிலையை  நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஆயிலில் போட்டு உற வைத்தும் அல்லது காய்ச்சியும் தலையில் தேய்த்து பலன் காணலாம்

 

கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய பல ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

 

Scientific information: The scientific name of curry plant is Murraya Koenigii Spreng and it belongs to the Rutaceae family. The plant is a native to India and is usually found in tropical and subtropical regions. It is cultivated in various countries such as China, Australia, Nigeria and Ceylon. Height of the plant ranges from small to medium. The useful parts of this plant are the leaves, root and the bark.

 

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் , பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இது தான் கறிவேப்பிலைக்கு  மணத்தை தருவதுமட்டுமல்லாமல்  பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

 

இந்திய உணவில்  வாசனைக்கு சேர்க்கப்படும் அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.  நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்.  இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

 

கறிவேப்பிலையை உபயோகபடுத்தி எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு, தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண்மை மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது

 

100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

 

கேரளா பல்கலைகழகத்தில், கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா என்பது பற்றி ஆராய்ச்சி செய்த  மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்று கண்டறிந்தனர். மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.. பாதிக்கிறது என்றும் செல்களிலுள்ள புரோட்டின் அழிவதால் விளைவாக கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன என்றும் அறிந்தனர். தாளிக்க  செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

 

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும் அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

இதை நாம் தலைமுறையாக சொல்லி கடைபிடித்து வந்தாலும் பலர் இதன் மருத்துவ குணத்தை நம்பமாட்டார்கள் ஆனால் அதையே மேலை நாட்டார் ஆராய்சி செய்து அறிவித்து அதனை மெடிசனாக அறிமுகப்படுத்தினால் அதனை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிப்பாரகள். அவர்களுக்கு நம் முன்னோர் சொல்வதை, நம்புவதைவிட மேலை நாட்டினர் சொன்னால் கண்மூடி அதை தேவ வாக்காக கடைபிடிப்பார்கள்.

 

அப்ப நீங்க எப்படி இப்பவே கறிவேப்பிலை வாங்க போறீங்களா அல்லது கறிவேப்பிலை மரத்தை உங்கள் வீட்டில் நடப் போறிங்களா இல்லை இதுலேயெல்லாம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை அமெரிக்காகாரன் மெடிசனாக அல்லது தலைக்குதேய்க்கும் கீரிமாக இதை பயன்படுத்தி தயாரித்த பின் தான் உபயோகிக்க போறீங்களா?

 

என்னவோ பண்ணுங்க... நான் படிச்சதை அறிந்ததை இங்கே சொல்லி இருக்கிறேன்,,பயனுள்ளதாக கருதிதானால் பயன் படுத்தி பாருங்கள். இதுசார்ந்த உங்கள் அனுபவங்களை முடிந்தால் சொல்லிவிட்டு போங்கள்

 

அன்புடன்

உங்கள் அபிமானத்திற்குரிய

மதுரைத்தமிழன்

http://avargal-unmaigal.blogspot.in/2013/02/blog-post_3223.html



--
*more articles click*
www.sahabudeen.com


No comments: