Sunday, February 17, 2013

'ஐந்து காரியங்களை அல்லாஹ்வைத் தவிர

'ஐந்து காரியங்களை அல்லாஹ்வைத்
தவிர வேறு எவரும்
அறிய முடியாது....... ..
#நாளை என்ன நடக்கும்
என்பதை எவரும் அறிய
முடியாது.
#கருவறைகளிலுள்ள
நிலைமைகளை எவரும்
அறிய முடியாது.
#ஒருவர் நாளை எதைச்
சம்பாதித்தார்
என்று அறிய முடியாது.
#ஒருவர் தாம் எந்த
இடத்தில் மரணிப்போம்
என்பதை அறிய
முடியாது.
#மழை எப்போது வருமென்பதையும்
எவரும் அறிய
முடியாது'
என்று இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்: என
அப்துல்லாஹ் இப்னு உமர்
(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹுல்
புகாரி 1039

தொழுகைக்காக ஒருவர்
ஒளுச்செய்து அந்த
ஒளுவை நிறைவாகச்
செய்துவிட்டு,
கடமையான
தொழுகையை நிறைவேற்ற,
அவர் நடந்து சென்று,
அத்தொழுகையை ஜனங்களுடன்
அல்லது ஜமாத்தோடு அல்லது பள்ளியில்
நிறைவேற்றிவிடின ்
அவரது பாவங்களை அவருக்காக
அல்லாஹ் மன்னிக்கிறான்
என அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹ்
அலைஹி வஸல்லம் அவர்கள்
கூற நான்
செவியுற்றேன் என
உதுமான்
ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்
கூறுகிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்:132

"உங்களில் ஒருவர்
தூக்கத்திலிருந்
து எழுந்து அவர்
தமது கையை மூன்று முறை கழுவும்வரை (தண்ணீர்)
பாத்திரத்தில்
கையை நுழைக்கவேன்டாம்
. (ஏனெனில்) நிச்சயமாக
அவரது கரம் இரவில்
எங்கே இருந்தது என்பதை (அவர்)
அறியமாட்டார்" என

அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹ்
அலைஹி வஸல்லம் அவர்கள்

கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு
ஸஹீஹ் முஸ்லிம் 105

ஒருவர் இறைத்தூதர்
(ஸல்) அவர்களிடம்
'இஸ்லாத்தில்
சிறந்தது எது' எனக்
கேட்டதற்கு,
'(பசித்தோருக்கு ) நீர்
உணவளிப்பதும் நீர்
அறிந்தவருக்கும்
அறியாதவருக்கும்
ஸலாம்
கூறுவதுமாகும்'
என்றார்கள்"

என அப்துல்லாஹ்

இப்னு அம்ர்(ரலி)

அறிவித்தார்.

ஸஹீஹுல் புகாரி 12.

அவர்கள் பூமியைப்
பார்க்கவில்லையா? -
அதில் மதிப்பு மிக்க
எத்தனையோ வகை (மரம்,
செடி, கொடி)
யாவற்றையும்
ஜோடி ஜோடியாக நாம்
முளைப்பித்திருக­
கின்றோம்்.
நிச்சயமாக இதில்
அத்தாட்சி இருக்கிறது.
எனினும் அவர்களில்
பெரும்பாலோர்
நம்பிக்கை கொள்வோராக
இல்லை.
அல்-குர்ஆன்:26:7-8



--
*more articles click*
www.sahabudeen.com


No comments: