சிரிப்பு 1:
அமெரிக்காவில் திருடர்களை கண்டுபிடிக்க ஒரு மெஷின் கண்டு பிடிச்சிருக்காங்க...
அந்த மெஷின் இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 70 திருடர்களை கண்டுபிடிச்சிருக்கு!
ஸ்பெயின் நாட்டுல 30 நிமிஷத்துல 150 திருடர்களை கண்டுபிடிச்சிருக்கு !
இந்தியாவில 15 நிமிஷத்துல
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அந்த மெஷினையே காணோம் !
சிரிப்பு 2:
மனநல மருத்துவமனையிலிருந்து 3 நோயாளிகள் பேசிக் கொண்டனர்:
பாலு : டேய் ! இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம 3 பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம்.
வேலு : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை; வெளியே சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும்.
பாலு : அப்படியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை; ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்..
*
*
*
சோமு: போச்சு! போச்சு !! நாம தப்பிக்கவே முடியாது
பாலு & வேலு: ஏன்!!!!!!
சோமு: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன்...வெளிய சுவரே இல்ல.. நாம ஏறி குதிக்கவும் முடியாது.... சுவர ஓட்ட போட்டும் தப்பிக்க முடியாது....
பாலு: சரி விடுடா .....முதல்ல அவங்க சுவர கட்டட்டும்... நாம அப்புறமா தப்பிச்சு போலாம்.!!!??...
சிரிப்பு 3:
கிளைடர் ப்ளைட் கிளப் பக்கத்தில் வியாபாரி ஒருவன் கடை போட்டு, பாராசூட்டுகளை விற்றுக் கொண்டிருந்தான்.
"வாங்க சார்..! வாங்க !! பாராசூட்டுகளை வாங்கிட்டுப் போங்க! விமானம்
திடீர்னு விபத்துல சிக்கும்போது கீழே குதிச்சு உயிர் பிழைக்கலாம் சார்….!"
ஒரு பயணி நின்றார்.
"பாராசூட் என்ன விலை?"
"இரண்டாயிரம் ரூபாய் சார்.."
"சரி…வாங்கிக்கிறேன். விமானம் விபத்துக்குள்ளாகி நான் பாராசூட்டிலிருந்து
குதிக்கும்போது அது ஒரு வேளை விரியலைன்னா ….?"
"பணம் வாபஸ் ஸார்..."
"............?!?!?!........"
சிரிப்பு 4:
குட்டி பையன் தீபக் : என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?
ஆசிரியை : ஆமாம்...
குட்டி பையன் தீபக் : அப்படின்னா, என் அம்மா அப்பாவை வரச்சொல்லி உங்கள் வீட்டில் பேசச் சொல்லட்டுமா?
ஆசிரியை : டேய் முட்டாள்... அஞ்சாம் கிளாஸ் படிக்கும் போதே இப்படியா?? உன் மனசுல என்ன நினைச்சிகிட்டிருக்க?
குட்டி பையன் தீபக் : ஹேய்யா.... நான் டியூசனுக்கு வர்றதைப் பற்றி சொன்னேன். கிறுக்கு பயபுள்ள எப்ப பார்த்தாலும் நம்மளயே நினைச்சிகிட்டு இருக்கா!
சிரிப்பு 5:
இரவு தூங்கும் முன் ஒரு தந்தை - மகள் உரையாடல் ...
"ஏன் அப்பா கொசு ராத்திரில மட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப அப்பா தூங்கும்?"
"அது தூக்கம் வரும்போது தூங்கும்..."
"கொசுக்கு வீடு எங்கேப்பா?"
"அதுக்கு வீடே இல்லை..."
"ஏம்பா வீடே இல்லை?"
"அது ரொம்பச் சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..."
நான் ரொம்ப சின்னப் பிள்ளைதானே... எனக்கு வீடு இருக்கே."
"இது அப்பா உனக்கு கட்டித் தந்தது."
"அப்போ கொசுவுக்கு அப்பா, அம்மா இல்லையா அப்பா?"
"அந்த அப்பா, அம்மா கொசுவும் ரொம்பச் சின்னதா இருக்கும்ல. அதான் அதுக்கு வீடு இல்ல.."
"கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வெச்சது?"
"கடவுள்."
"கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா?"
"கடிக்காது."
"ஏம்பா கடிக்காது?"
"கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்."
"கடவுள் நல்லவராப்பா?"
"ரொம்ப நல்லவர்."
"அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?"
"அது அப்படித்தான். நீ தூங்கு."
"கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?"
"அதுக்குப் பசிக்குது. வாயை மூடிட்டுத் தூங்குடா செல்லம்."
"ஒரே ஒரு கேள்விப்பா? "
"கேட்டுத் தொலை..."
"கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?"
"அதுக்குப் பல்லே இல்லை..."
"பிறகு எப்படிக் கடிக்கும்?"
"அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாயை மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்."
"பேயைக் கொசு கடிக்குமாப்பா?"
'இப்ப நீ வாயை மூடிட்டுத் தூங்கப்போறியா இல்லையா?"
"நாம தூங்கும்போது வாயும் தூங்குமாப்பா..?"
"..............?!?!?!?!?!?!............."
சிரிப்பு 6:
இப்படிதான் விவாகரத்து நடக்குதோ ????
கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.
அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.
"அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சனை?"
"அடுப்படியில பிரச்சனை எதுவும் இல்லைங்க"
"ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?"
"எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?"
"அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது"
"தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்..."
"கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?"
"அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க"
"வீட்டுக்காரரோட என்ன சண்டை?"
"வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு"
இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.
"வேற எதுக்காக அவர் விவாகரத்து கேட்கிறார் ???" என்று அலறி விட்டு இருமினார்.
"ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?"
சிரிப்பு 7:
"ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?"
"எப்போ?"
"ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி..."
"ஓ, அதுவா சார் என் வீட்டுகாரர் தான் கூப்பிட்டார், இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கார்?"
"யாரு பேசுறதுன்னு தெரியலயே?"
"நான் அவரோட மனைவி.. என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனா என் ஹஸ்பன்ட்டுக்கு தான் சார் உங்களைத் தெரியும்."
"இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பேர் என்ன?"
"ஃபோன் என் மாமனார் பேர்ல தான் இருக்கு. ஆனா ஃபோன் பண்ணினது என் ஹஸ்பன்ட்"
"சரி என்ன விஷயமா ஃபோன் பண்ணினார்"
"அதை சொல்லத்தான் உங்கள பார்க்க வந்துட்டு இருக்கார்.."
"சரி எங்கே வர்றாரு?"
"ஆமா எங்க வீட்லேர்ந்து தான் வர்றாரு"
"ரொம்ப சந்தோஷம் இதுக்கு மேல என்னால முடியாது ..ஃபோனை வெச்சிடறேன் ..அவர் வரட்டும் பார்த்துக்கறேன்..."
ரூம்லேர்ந்து அவர் "ஏண்டி, யார் கிட்ட இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தே?"
"தெரியாம ஒரு ராங்க் கால் பண்ணிட்டேன்...அந்த நம்பர்லேர்ந்து தான் ஒருத்தர் கூப்பிட்டாரு.. ச்சும்ம்மா பேசிட்டு இருந்தேன் மாமா ......"
சிரிப்பு 8:
"என்ன பாலாஜி ? தலையில இவ்வளவு பெரிய கட்டு ?? என்னாச்சு ??"
"அது ஒண்ணும் இல்ல பாஸு....என் பொண்டாட்டி நேத்து வாழைபழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா... "
"உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடணும்... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? "
"கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி... "
சிரிப்பு 9:
ரொம்ப நாள் கழிச்சி உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்... வெறும் டீ மட்டும் தானா மச்சி ??
வேற என்ன வேணும் ???
கடிச்சிக்க ஏதாவது ??
நாய் இருக்கு..அவுத்து விடவா??
??????
சிரிப்பு 10:
தீபக் ஒரு நேர்முக தேர்வுக்காக அலுவலகம் செல்கிறான். எப்படியாவது இந்த வேலை கிடைத்து விட வேண்டும் என்பது அவன் எண்ணம். அலுவலக தேர்வு அறையில்...
மேலாளர்: நான் கேக்குற கேள்விக்கெல்லாம் எதிர்மறையான பதிலை சொல்லணும்..
தீபக்: சரி சார்.. முயற்சி பண்றேன்..
மேலாளர்: இரவு?
தீபக்:பகல்...
மேலாளர்: புதுமை?
தீபக்: பழமை..
மேலாளர்: வறுமை?
தீபக்: செழுமை..
மேலாளர்: வெரி குட்... கரெக்டா சொல்றியே !
தீபக்: வெரி பேட்...தப்பா சொல்றியே...
மேலாளர்: ஆங்... ம்ம்ம்... ஆக்கல்?
தீபக்: அழித்தல்...
மேலாளர்: அழகு?
தீபக்: ஆபத்து..
மேலாளர்: தப்பு..
தீபக்: சரி....
மேலாளர்: இல்ல தம்பி..நீங்க சொல்றது தப்பு..
தீபக்: ஆமா அண்ணே ! நான் சொல்றது சரி..
மேலாளர்: ப்ச்.... நீங்க கிளம்பலாம்..
தீபக்: நீங்க இருக்கலாம்...
மேலாளர்: போதும்..வெளியே போப்பா !!!
தீபக்: வேணும்..உள்ளே வாப்பா !!!
மேலாளர்: நிறுத்துடா ...
தீபக்: ஆரம்பிடா..
மேலாளர்: ஐயோ கடவுளே !!! என்ன காப்பாத்து !!
தீபக்: ஆஹா பிசாசே!! இவனை கொல்லு ...
மேலாளர்: யு ஆர் ரிஜக்டட் ...
தீபக்: ஐ ஆம் செலக்டட் !
மேலாளர்: ?!?!?!..போதும் நீ செலக்டட் தான்.. ஆர்டர் வீடு தேடி வரும்..இப்போ நீ போப்பா..
தீபக்: ரொம்ப தேங்க்ஸ் சார்.. :-)
சிரிப்பு 11:
ஒரு சர்தாஜி ஜோக்...
நியூயார்க்கில் மாநகரில், ஒரு சர்தார்ஜியும் , அமெரிக்கரும் சாக்லெட் கடைக்குள் நுழைந்தனர்.
அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு வெளியே வந்தனர்.
அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த 3 சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து சர்தார்ஜியிடம் காட்டி,
"நாங்கெல்லாம் யாரு! அப்பவே நாங்க அப்படி..! யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்து கொண்டு வந்துட்டேன் பார்த்தியா?" என்று பெருமை அடித்ததோடு மட்டுமில்லாமல், "உன்னால இதைவிட பெரிசா ஏதாவது செய்ய முடியுமா?" என்று சவால் வேறு விட்டார் சர்தார்ஜியிடம்.
விடுவாரா நம்ம சர்தார்ஜி... "உள்ள வா... உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னன்னு காட்டுறேன்னு", சொல்லி அமெரிக்கரை சாக்லெட் கடையின் உள்ளே அழைத்துச் சென்றார்.
விற்பனை கவுன்டரில் இருந்தவரிடம் சென்ற சர்தார்ஜி, அவனிடம் கேட்டார், ஒரு மேஜிக் காட்டுறேன் பார்க்கிறியா?..
கடைக்காரரும் சரியென்று தலையாட்ட, கவுண்டரில் இருந்து 1 சாக்லெட் பார் எடுத்து, அதனை தின்று முடித்தார். அடுத்து இன்னொரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று தீர்த்தார். பிறகு 3 வதாக ஒரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று முடித்துவிட்டு கவுன்டரில் இருந்த கடைக்காரரை ஏறிட்டுப் பார்த்தார்.
கவுன்டரில் இருந்தவர், " எல்லாம் சரி. இதில் மேஜிக் எங்கே இருக்கிறது?."
சர்தார்ஜி அமைதியாக பதில் அளித்தார், " என் ஃப்ரெண்டோட பாக்கெட்ல செக் பண்ணிப்பாரு... நான் சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும் இருக்கும்...'
#சப்பாத்தி சாப்பிட்டாலும் நம்ம ஆளு மூளைக்காரந்தாண்டா...
சிரிப்பு 12:
"இருட்டு நகரம்" என்று அழைக்கப்பட்ட நகரத்தில் அந்த லைப்ரரி இருக்கிறது.
அந்த லைப்ரரியில் இரண்டு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன.
அதில், இரண்டாவது புத்தகத்தில் ஒரே ஒரு பக்கம் மட்டுமே உண்டு.
அந்தப் பக்கம் இரண்டு Column களாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு Columnல் ஆப்பிரிக்க யானையின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது.
இன்னொரு Columnல் Fluffy வகை பூனைகளின் படம் அச்சிடப் பட்டிருக்கிறது.
இதிலிருந்து என்னத் தெரிகிறது?
.
.
.
.
.
..
.
.
.
யானைக்கு ஒரு COLUMN வந்தால், பூனைக்கு ஒரு COLUMN வரும்.
http://pazhaiyapaper.blogspot.in/2014/03/tamil-jokes.html
--
No comments:
Post a Comment