அது அபூதாவுத் என்ற ஒரு ஹதீஸ் புத்தகம்.
அது உலக இஸ்லாமிய சமூகத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஆறு புத்தகங்களுள் ஒன்று.
அதில் ஒழுக்கம் என்ற தலைப்பின் கீழ் வருக்கின்ற பாடம் தான் அன்றைய கரு.
அது ஒரு அற்புதமான ஹதீஸ்.
என் மாணவர்களை விட ஒரு கணம் ஆடிப்போனவன் நான் தான்.
ஏனெனில் என் ஆசான் பெருமானார் ஆயிற்றே. " நிச்சயமாக நான் ஒரு ஆசிரியனாக அனுபப்பட்டுள்ளேன். ( நபிமொழி)
எத்துணை விசாலமான பொருளில் 1400 ஆண்டுகளுக்கு முன் பெருமானார் அவர்கள் பேசியுள்ளார்கள்.
அந்த ஹதீஸின் பொருள் இதோ
" நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் நான் பெருமானார் அவர்களோடு வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்தேன். திடீரென நாங்கள் இருந்த வாகனம் குதிக்க ஆரம்பித்தது.
அப்பொழுது அவர் கூறினார் : இதை கெடுக்கிற அந்த ஷைத்தான் அழிந்து போகட்டும் என்று . அதற்கு பெருமானார் அவர்கள் பதிலளித்தார்கள்
"நீங்கள் அவ்வாறு கூற வேண்டாம்,ஏனெனில் நீங்கள் அவ்வாறு கூறினால் அவனுக்கு பெருமை வந்து ஒரு வீட்டை போன்று ஆகிவிடுகிறான்
இன்னும் சொல்லுகிறான் என்னுடைய சக்தியால் தான் இது நடந்துள்ளது.
மாறாக நீங்கள் சொல்லுங்கள்
" பிஸ்மில்லாஹ்" வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று இவ்வாறு நீங்கள் கூறினால்
அவன் மிக அற்பமான ஒரு பொருளாக ஆகிவிடுகிறான். அதுவும் எந்த அளவிற்கென்றால் ஒரு ஈ யைப்போன்று ஆகிவிடுகிறான்."
இது தான் அன்று நடந்த ஹதீஸ், பொதுவாக பார்த்தால் பெருமானாரின் வாழ்வில் நடந்த எத்தணையோ சம்பவங்களில் இதுவும் ஒன்று
இன்னும் கொஞ்சம் நெருங்கிப்பார்த்தால் தன் தோழர்களை பெருமானார் பண்படுத்திய வாழ்வியல் வழிகாட்டும் நெறி முறை.
இன்னும் கொஞ்சம் அதிமாக உற்று நோக்கினால் பிஸ்மில்லாஹ் பற்றிய ஒரு விழிப்புணர்வு
ஏனெனில், பிஸ்மில்லாஹ் என்கிற இந்த வார்த்தை இஸ்லாமியர்களின் வாழ்வோடும், வாழ்வியல் ஆதாரங்களோடும், அவர்களின் இரத்தத்திலும், இரத்த நாளத்திலும் உறைந்து கிடக்கிற ஒரு சொல் அது,
அல்ல அல்ல அது சொல் அல்ல அது தான் ஒரு முஃமினின் வாழ்வு.
ஏனெனில் இந்த சமூகத்திற்கு பெருமானர் கூறினார்கள் " பிஸ்மில்லாஹ் கூறி ஆரம்பிக்கப்படாத எந்த காரியமானாலும் அது முழுமை பெறாதது".
ஆக இது பிஸ்மில்லாஹ் குறித்து நபியவகளின் வழிகாட்டுதல் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் இதுவெல்லாம் தாண்டி இன்னும் சில செய்திகள் இந்த ஹதீஸில் மறைந்து கிடக்கின்றன.
அது தான் மற்ற ஹதீஸ்களில் இல்லாத " வீடு" "ஈ" போன்ற வார்த்தைகள். இவை என்ன?
இது தான் காட்சிப்படுத்துதல் ( கற்பனை) என்ற Visualization பற்றியது .
தற்காலத்தில் மனவளம், மற்றும் மனோதத்துவம் போன்ற துறைகள் விரிந்திருக்கிற இன்றைய காலத்தில், அவை பற்றிய குர் ஆன் ஹதீஸ் பார்வைகளும் விரிவடைந்துள்ளன.
இந்த ஹதீஸில் நபியவர்கள் தன் தோழர்களுக்கு சொன்ன தகவல் ஷைத்தானை நீங்கள் திட்டினால் ஒரு வீடு போன்று ஆகிவிடுவான்.
இந்த அரபியப்பாலைவனத்தில் பொதுவாக அவர்களின் தங்குமிடம் மரத்தின் நிழலோ அல்லது ஒரு கூடாரமோ தான்.
வீடு என்பதெல்லாம் பெரிய விஷயம் தான்.
ஆகையால், அது பெரிய விஷயம் என்பதை குறிப்பற்கான ஒரு குறியீடாக வீட்டை சொன்னார்கள்.
அது போலவே ஒரு சிறிய பொருள் என்று குறிப்பதற்கு ஈ, கொசு போன்றவற்றை உதாரணம் செல்வதை பரவலாக நாம் பார்கிறோம்.
உண்மையில் ஷைத்தான் ஒரு வீட்டை போன்று அல்லது ஒரு ஈ யைப்போன்று ஆகிவிடுவானா? என்றால்
இல்லை, ஷைத்தான் அப்படித்தான் இருப்பான் அதை தான் அடுத்த ஹதீஸ் வசனம் மிக தெளிவாக விளக்குகிறது.
அவன் என் சக்தியால் கெடுத்தேன் என்று பெருமை கொள்வான்.
இந்த பெருமை கொள்வதில் குறியீடு தான் வீடு போன்று ஆகிவிடுதல்
ஆனால் இந்த இட்த்தில் இவ்வார்த்தையை பயன்படுத்திய விஷயம் வேறு, ஷைத்தான் அவன் நிலையில் தான் இருப்பான் ஆனால் பார்க்கிற நம் மனம் இருக்கிறதே அது அவனைக்குறித்து ஒரு பெரும்பொருளாக காட்டும் என்பது தான் உண்மை.
ஏனெனில், எந்த பொருளையும் பெரிது படுத்தி அல்லது சிறுமைப்படுத்தி காண்பிப்பது மனிதனின் மனமும், அதில் சதா ஊற்றெடுக்கும் அவன் கற்பனைத்திறனுமே.
இன்றைய கார்ப்ரேட் உலகின் உளவியல் வழிகாட்டிகள் இவ்வாறு கூறுகின்றனர்
" எந்த பிரச்சனையையும் அதன் உள்ளே இருந்து கொண்டு பார்ப்பதால் அது கண்டிப்பாக பூதகரமாக தெரியும்,
ஆனால், அதே பிரச்சனையை வெளியில் இருந்து பார்த்தால், அதை தீர்ப்பதற்கான அழகிய வழிகாட்டுதல்கள் மிக எளிமையாக நமக்கு புலப்படும்.
இதை தான் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் ஷைத்தானை முன் வைத்து பெருமானார் நமக்கு பாடம் நடத்தினார்கள் " சைத்தானின் வழி கெடுக்கும் செயலை அதன் உள்ளே நின்று கொண்டு பார்ப்பதால் அது உண்மையில் மிகப்பெரிய விஷயமாக நம் கற்பனையில் நீட்சி பெறுகிறது. அதை ஒரு வீட்டை போன்றும் ஒரு மலையைப்போன்றும் ஒரு பெரும்பொருளாக உங்கள் மனம் படம்பிடித்து காண்பிக்கும்.
ஒரு சில தினங்களுக்கு முன்னால் பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன்.
அதில் மாணவர்களுக்கு தேர்வு வழிகாட்டுவதற்க்காக ஒருவர் ஒரு செய்தியை பதிவுசெய்திருந்தார்.
" மாணவர்களுக்கு காட்சிப்படுத்துதலை சொல்லித்தர வேண்டும். அவர்கள் மிக அமைதியாக நன்றாக பரிட்டை எழுதுவது போன்றும்,
அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது போன்றும்
அவர்களை அடிக்கடி காட்சிப்படுத்தி பார்க்க சொல்லவேண்டும்.
இது அவர்களின் தேர்வு பயத்தை துரத்தி அவர்கள் மிக சந்தோசமாக பரிட்டை எழுதி
அதிக மதிப்பெண் பெற மிக அழகிய வழிகளை காண்பித்துக்கொடுக்கும்.
இந்த ஹதீஸின் மூலம் இன்னும் நாம் விளங்கக்கூடிய ஒரு செய்தி, பொதுவாக மனம் என்பது எதிர்மறை கற்பனையை மீண்டும் மீண்டும் வளர்க்க வைக்கும் என்பது தான்.
இதை பொதுவாக இன்றைய உளவியளார்களும் ஏற்றுக்கொள்கின்றனர்.
90% உடல் நோய்களுக்கு காரணம் மனம் தான், அந்த மனதை இயக்கவைக்கும் முழு சக்திக்கும் கற்பனை வளமே அடிப்படை காரணம்.
அதுவும் இன்றைய இன்டர்நெட் நவயுகத்தில் மனிதன் தனாக பல நோய்களை வருத்திக்கொள்கிறான்.
என்னோடு அலுவலகத்தில் ஒரு நண்பர் வேலை செய்து கொண்டிருந்தார்,
ஒரு நாள் திடிரென மிகவும் சோகமாக இருந்தார், ஏதோ பிரச்சனை போலும் என்று எண்ணி அவரிடம் விசாரித்தேன்.
அவர் உடல் நிலை சரியில்லை என்று கூறினார்.
நானும் மிகுந்த அக்கரையோடு என்ன செய்கிறது என்று விசாரித்தேன்.
மனிதன் அழ ஆரம்பித்துவிட்டார்.
அவரை அமைதிப்படுத்துவதே மிகவும் கடினமாகிவிட்டது.
பின்பு மெதுவாக பேச ஆரம்பித்தார்,
" நான் சிறுவயதில் விளையாட்டு தனமாக ஓரிரு முறை வீட்டிற்கு தெரியாமல் சிக்ரேட் பிடித்துள்ளேன். சில தினங்களுக்கு முன் ஒரு ஈமெயில் வந்திருந்தது அதில் சிக்ரேட் பிடிப்பதானல் ஏற்படும் கேன்சர் பற்றி படத்தோடு அனுப்பியிருந்தார்கள்.
அதை பார்த்தபின் எனக்கு பயம் ஏற்பட்டுவிட்டது. என் வாயில் கடந்த ஒரு வாரமாக ஒரு புண் வேறு இருந்தது, ஆகையால் நான் பயந்து டாக்டரை போய் பார்த்தேன்.
அவர் இது சாதரண வாய்புண் என்று சொல்லி பீ காம்ளக்ஸ் மாத்திரை எழுதித்தந்தார்.
ஆனால், நான் என் சிறு வயது சாகசங்களை எடுத்து சொல்லி இது சாதாரண வாய்புண் இல்லை ஆகையால் நன்றாக டெஸ்ட் செய்யுங்கள் என்று சொன்னேன்.
டாக்டருக்கும் எனக்கும் நடந்த நீண்ட விவாதத்தில் நானே வென்றேன்.
வேண்டா வெறுப்பாக கடைசியாக டாக்டர் டெஸ்ட் எழுதி தந்தார்.
ஆனால், ரிசல்ட் என்னவோ மாற்றமாக வந்தது. இப்பொழுது டாக்டர் ஜெயித்துவிட்டார்.
டாக்டர் என்னிடம் கூறினார் " நீங்கள் நல்ல ஒரு சைக்கார்டிஸ் டாக்டரை பாருங்கள் தம்பி"
நான் சொன்னேன் டாக்டர் மிக சரியாதான் சொல்லியிருக்கிறார் என்று,
உடனே அவர் கூறினார் " சில நேரம் ஆரம்பத்தில் டெஸ்டில் தெரியாமல் சில நாட்களித்து தெரிந்தாலும் தெரியுமோ மவ்லானா என்று கேட்டார்.
உடனே நான் சுதாரித்துக்கொண்டு உங்களிடம் நான் பேசிக்கொண்டிருந்தால் ஒரு வேலை நான் தான் சைய்க்கர்டிக்ஸ் டாக்டர் பார்க்கவேண்டியிருக்கும் என்று கூறிவிட்டு ஆளை விடுடா சாமி என்று ஓடி வந்துவிட்டேன்.
இன்று கூகுல் உலகில் சஞ்சரிக்கும் நாம், டாக்டரிடம் போவதற்கு முன்னால் கூகுல் சாலையில் ஒரு நடைபோடலாமே என்று போகப்போய் அது சாதாரண வயிற்று வலியைக்கூட ஒரு கேன்சர் நோய் அளவிற்க்கு காட்டி நம்மை பீதியில் தள்ளுவதை நாம் பார்க்கலாம்.
நோயாளியின் பீதியில் ஒரு80% ஏற்றிவிடுகிறது.
You received this message because you are subscribed to the Google Groups "Tamil Tafseer" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamiltafseer+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
No comments:
Post a Comment