Thursday, March 27, 2014

உடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவுகள்

உடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவுகள்

1.) முட்டையின் மஞ்சள் கரு (egg yolk)
மஞ்சளில் அதிகப்படியான கொழுப்புச்சத்து உள்ளது.ஒரு நாள் முழுக்க தேவையான அளவைவிட அதிக அளவில் ஒரே முட்டையில் உள்ளது. வெள்ளைக்கருவில் புரதம்(protein) அதிகமிருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு வெள்ளைக்கரு மட்டுமே போதுமானது

2.)
மைதா மாவில் செய்த உணவுகள் -
மைதா என்பது ஒரு சீரழிந்த கோதுமை. நார்சத்து அறவே அற்றது.எனவே குழந்தைகளின் உடல் பருமனைக்குறைக்க அறவே தவிர்க்கவேண்டும். உதாரணம்- பரோட்டா,பஃப்ஸ், பன் ,பிரட்

3.)
ஆட்டிறைச்சி தவிர்க்கப்படவேண்டும்..(எண்ணையில் பொரிக்காத கோழி மற்றும் மீன் தரலாம்-க்ரேவி அல்லது குழம்பு)

4.)
எண்ணையில் பொரித்த உணவுகள்

5.)
குளிர்பானங்கள் - கோலா பானங்கள் ; இவைகளில் empty calories தான் உள்ளன்.இவை கட்டாயம் உடல் பருமனை உண்டாக்கும்

6.)
நொறுக்குத்தீனிகள் -உருளை சிப்ஸ்

7.)
மாவுச்சத்து அதிகமுள்ள-உருளைக்கிழங்கு,வாழைக்காய்,வாழைப்பழம்

8.)
இரவில் அரிசி சோறு தவிர்க்கவும்

9.)
கேக், ஐஸ்கிரீம் -அடிக்கடி தருவதை தவிர்க்கவும்

10.)
காலை உணவினை தவிர்க்ககூடாது. இதனால் உடலில் சர்க்கரை அளவு குறைந்து பள்ளியில் உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு ஏற்படும். மேலும் பட்டினி இருப்பதால் அடுத்தவேளை உணவின் சத்துக்களை கொழுப்பாக மாற்றி சேமிக்கத்தொடங்கும்.இதுவே உடல் பருமனின் ஆரம்பப்புள்ளியாக மாறலாம்.சரியான வேளையில் மிதமான அளவில் சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் பருமன் வருவதில்லை


--
*more articles click*
www.sahabudeen.com


No comments: