-
அண்ணன் இம்தியாஸ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. சகோதரர் ஹபீப் அவர்களின் மெடிக்கல் ரிப்போர், புகைப்படம் மற்றும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள சகோதரருக்கு தாராளமாக உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹூஸைன்கனி, ரியாத். ------------------------------------------------------------------------------------------- இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை) سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) ----------------------------------------------------------------------- -------Original Message------- From: Ahmed Imthias Date: 6/9/2012 7:48:03 PM Subject: [TAFAREG] Need your support : பாதிக்கப்பட்ட தமிழர் ஒருவருக்கு உதவி!!!
அன்பின் தமிழ் நெஞ்சங்களே, ரியாத்தில் வேலைசெய்யும்பொழுது மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழரின் துயர்துடைக்கும் நோக்கில் இம்மடல் உங்களை வந்தடைகிறது. திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த மெளலவி.ஹபீபுர் ரஹ்மான் தனது ஆலிம் படிப்பை மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக்கல்லூரியில் முடித்து விட்டு, ஏழ்மை குடும்பச் சூழ்நிலைக் காரணமாக, வேலைக்காக வேண்டி ரியாத் வந்து பணி செய்துக் கொண்டிருந்தார். அதன் விளைவாக, தலை முதல் வயிற்றுக்கு சற்று மேல்பகுதி வரை உணர்வுகளோடும், மறுபாதியான, அதற்கும் கீழே உணர்வுகளே இல்லாமலும் இருந்த நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கான அத்தியாவசிய அறுவை சிகிச்சை முடிந்தவுடன், ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியே அனுப்பி விட்டது. சிறிய கான்ட்ராக்ட்கள் எடுத்து நடத்தும் கம்பெனியாதலால், எந்த பெரிய உதவியும் அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. கேரளாவின் கோட்டயத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்து, சிகிச்சை அளிக்க அவரின் உறவினர்களும், நண்பர்களும் முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள். ரியாத் பத்தா - ஷிஃபா அல்ஜஜீரா ஆஸ்பத்திரி கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில், ரியாத் சமுதாய சேவகர் ஷிஹாப் மற்றும் கேரள சமூக சேவை அமைப்பின் உதவியுடன் ஒரு அறையில் தங்கியிருந்து, ஊருக்கு போகும் நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர் ஹபீப் ரஹ்மான் அவர்களுக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர். அவர்களை திருமணத்திற்காக கரைசேர்க்கும், மிகப்பெரிய பொறுப்புடன் வந்த அவருக்கு நேர்ந்த கதி, மிகவும் கவலைப்படக்கூடியதாக உள்ளது. ஏழ்மையான அந்த சகோதரருக்கு, உதவ வேண்டி நல்லுள்ளம் படைத்த உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். விமானத்தில், ஸ்ட்ரெச்சரர் வசதியுள்ள சீட்டில் தான் அவர் தற்போதுள்ள நிலையில் பயணம் செய்ய முடியும். ஏர் இந்தியா விமானத்தில், கொச்சினிற்கு நேரடியாகத் தான் பயணித்து, கோட்டயம் செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்கு நிறைய செலவு ஆகும். தங்களால் இயன்ற உதவியை imthias@imthias.com என்ற முகவரிக்கு அனுப்பினால், உங்களிடம் நேரடியாக வந்தோ அல்லது வங்கிமாறலோ பெற்று உரியவரிடம் சேர்ப்பித்து அவரின் உறுதிப்பத்திரம் பெற்று அனுப்புகிறோம். அவரின் புகைப்படம், வீடியோ மற்றும் மருத்துவ ரிப்போர்ட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளோம், அடுத்த மடலில் அதன் முழுவிபரம் தருகிறோம். அன்புடன், இம்தியாஸ் செயலாளர் : ரியாத் தமிழ்ச் சங்கம் மற்றும் சவூதி தமிழ்ச் சங்கம் தலைவர் : தஃபர்ரஜ் தொலைபேசி - 0540753261 __._,_.___ -- |
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment