Wednesday, June 13, 2012

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! 
ஜாம்பிய நாட்டுப் பெண்களின் திருமணத்தின் போது அவர்களுக்கு யானைத் தந்தத்திலான வளையல்களை அணிவிப்பது வழக்கம். இதே போல் தந்தக் காலணிகளும் அணிவார்கள்.
 

இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் திருமணத் திற்குப் பிறகு எவ்வளவுதான் பண நெருக்கடி என்றாலும் இவர்கள் தந்த வளையல் களையோ, காதணிகளையோ விற்பதில்லை. ஜாம்பியர்கள் அணில்களைக் கொல்வதைப் பாவமாக கருகிறார்கள்.
 

***
 

*முதன் முதலில் சீனர்கள்தான் மரப்படுக்கைகளைத் தயாரித்து பயன்படுத்தினார்கள். மரத்தினால் தலையணையையும் செய்தார்கள். ஒவ்வொருவரின் தலைக்கு ஏற்ப அளவெடுத்தும் அதில் பள்ளம் தோண்டப்படும்.
 

படுக்கையில் படுத்ததும் ஒருவரது தலை அந்தப் பள்ளத்திற்குள் சரியாகச் சென்று பொருந்திவிடும். அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ திரும்ப முடியாது. மல்லாந்த படியே தலையை அசைக்காமல்தான் தூங்க வேண்டும். இன்றும் கூட துறவிகளிடம் மரத் தலையணையில் படுத்து உறங்கும் பழக்கம் இருக்கிறது.
 

***
 

*தவளை கத்தினால் மழை வரும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கை நமது நாட்டில் மட்டுமின்றி சீனாவிலும் இருக்கிறது. ஆனால் சீனர்கள் அதை விஞ்ஞானப் பூர்வமாகவே நிரூபித்ததோடு தவளைச் சத்தத்தை வைத்து துல்லியமாக மழை வரும் நாள் மற்றும் நேரத்தைக் கணிக்கிறார்கள். தவளை எழுப்பும் ஒவ்வொரு விதமான சத்தத்தை வைத்தே மழைபெய்யவிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.
 

அதன்படி விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் பயிர் செய்யவும் தொடங்கி விடுகிறார்கள். இந்தப் பழக்கம் சீனாவின் கிழக்கு மாகாணப்பகுதிகளில் அதிக அளவில் இருக்கிறது.
 

***

*ப்ராங்க் ஏம்ஸ் என்பவர் நியூயார்க்கை சேர்ந்தவர். இவர் வயது 43. இவரது புருவ முடி தான் உலகிலேயே மிகவும் நீளமானது. இதன் நீளம் 9.6 செ.மீ., இது கின்னஸ் ரிக்கார்டில் இடம் பெற்றுள்ளது.
 

*விட்டாலி என்பவர் ரஷ்யாவை சேர்ந்தவர். இவர் புது வகையான ஒரு நோயால் 15 வருடங்களாக துன்பப்படுகிறார். இவரால் 5டிகிரி சி வெப்பத்திற்கு மேல் தாங்க முடியாது. இவரே ராட்சஷ வடிவ பிரிஜ் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் தான் வசிக்கிறார். இவர் இரவு நேரத்தில் மட்டுமே வெளியே செல்வார்.
 

*சீனாவிலுள்ள பீஜிங் என்ற நகரத்தில் உள்ளது மேக் டோனால்ட் என்ற ரெஸ்டாரென்ட். இது தான் உலகிலேயே மிகப் பெரியது. இது 28 ஆயிரம் சதுர அடி பரப்பில் 700 இருக்கைகள் கொண்டது. இதில் 29 கேஷ் கவுண்டர்கள் உள்ளன. ஏப்ரல் 23, 1992ம் ஆண்டு திறக்கப்பட்டது
 

*மைக் பேஷன் என்பவர் அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் என்ற மாநிலத்தின் மேயராக பொறுப்பேற்றுள்ளார். இவர் தான் மிகவும் இளம் வயதிலேயே மேயராகி உள்ளவர். தனது 18வது பிறந்த நாளை கொண்டாடி விட்டு 2005ம் ஆண்டு நடைபெற்ற எலெக்ஷனில், நின்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட 51வயது டக்லஸ் என்பவரை இரண்டு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து வெற்றி பெற்றுவிட்டார். இந்த இளம் மேயர் தன்னுடைய படிப்பை தொடர முடிவு செய்துள்ளார்.
 

*கவுதம் பட்டேல் என்பவர் உலகிலுள்ள உயர்ந்த மலைகளான ஏழு மலைகளில் ஐந்தில் ஏறி சாதனை படைத்துள்ள முதல் இந்தியர் ஆவார். இவர் 1998ம் ஆண்டு ஆப்பிரிக்காவிலுள்ள கிளிமஞ்ஜாரோ என்ற மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
 

*ஜெர்மனியிலுள்ள ஹேம்பர்க் என்ற இடத்தில் உள்ள குளம் ஒன்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தவளைகள் வயிறு வெடித்து இறந்து போயிருந்தன. இவ்வகை தவளைகளின் உடம்பு திடீரென்று இதன் உருவத்தை விட 3 அல்லது 4 மடங்காக பெரிதாகி வயிறு வெடித்து இறந்துவிடுகிறது. விஞ்ஞானிகள் ஏதோ ஒரு வைரஸ் அல்லது பங்கஸ்தான் இந்த தவளைகளின் இறப்பிற்கு காரணம் என்று கருதுகின்றனர்.
 

*ஸ்காட் ரிட்டர் என்பவர் அமெரிக்காவில் உள்ள ஓஹியோ பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார். இவர் உலகிலேயே மிகப் பெரிய போட்டியான மியூஸிக்கல் சேர் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் எத்தனை பேர்கள் கலந்து கொண்டனர் தெரியுமா? 4,514 பேர். இதில் இவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
 

Engr.Sulthan

 


--
*more articles click*
www.sahabudeen.com



No comments: