Wednesday, June 20, 2012

மருத்துவர்கள் நியமனத்தில் பச்சை துரோகமா?


மருத்துவர்கள் நியமனத்தில் பச்சை துரோகமா?

Source: www.tmmk.in 

Tuesday, 19 June 2012 14:00

 

தமிழக அரசு மருத்துவர் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு பச்சை துரோகம் செய்ததா? - பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசு சார்ந்த மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக தற்காலிகமாக நியமனம் செய்த மருத்துவர்களில் ஒருவர் கூட முஸ்லிம இல்லை என்று முதலில் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மைதீனும் அதன் பின்னர் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களும் அறிக்கை வெளியி்ட்டனர். இவர்களை அடிபிசகாமல் பின்பற்றி சமுதாயத்தில் பொய்யை மூலதனமாக கொண்டு இயங்கும் ஒரு தறுதலை அமைப்பு போராட்டம் கூட நடத்தியது. தமிழக அரசு சமீபத்தில் நியமனம் செய்த தற்காலிக மருத்துவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பது உண்மை தானா என்பதை ஆய்வுச் செய்தோம்.

புதுக்கோட்டை சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் உச்சபட்ச நிலையில் இருந்த நிலையில் கத்தாரில் இருந்த நானும் அ. அஸ்லம் பாஷாவும் இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயிடம் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு கேட்ட போது அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட துறையிடம் விசாரித்து தகவல் வந்ததும்  தருவதாக கூறினார். இதன் பிறகு அமைச்சரே தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தமிழக அரசின் மருத்துவத் துறைக்கு 10A 1 விதிமுறையின் படி ஜனவரி 20 முதல் மார்ச் 27 வரை 688 மருத்துவர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டதாகவும் இதில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 24 மருத்துவர்களும் திறந்த போட்டியில் (Open Competition) 28 மருத்துவர்களும் நியமனம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இது குறித்து எழுத்துபூர்வமாக தகவல் அளிக்கும் படி கேட்டுக் கொண்டோம். புதுக்கோட்டையிலிருந்து சென்னை திரும்பியவுடன் தகவல் அளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சென்னை திரும்பிய பிறகு அவரை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி, பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது மற்றும் கல்வி வழிகாட்டித் துறையின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.எப். கான் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அமைச்சர் 688 மருத்துவர்களில் 52 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்ட பட்டியலை வழங்கினார். அமைச்சர் அளித்த பட்டியலை நாம் ஆய்வுச் செய்ததுடன் மருத்துவர் நியமன வாரியத்தின் அதிகாரிகளுடன் பேராசிரியர் எம்.எப். கானும், மனிதநேய மக்கள் கட்சியின் முன்னாள் தலைமை நிலையச் செயலாளர் திருவள்ளுர் இஸ்மாயிலும் விளக்கம் கேட்டனர். பேராசிரியர் காதர் மைதீனும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் இவர்கள் வெளியிட்ட அறிக்கையை நம்பி ஆய்வுச் செய்யாமல் முற்றுகை போராட்டம் அறிவித்த ஜைனுல் ஆபிதீனும் விவரம் என்னவென்று அறியாமல் விசாரணை எதுவும் செய்யாமல் செயல்பட்டுள்ளார்கள் என்பதை அறிய முடிந்தது.

மக்கள் நல்வாழ்வு துறையின் இணையத் தளத்தில் தற்காலிக மருத்துவர் நியமனத்திற்காக மார்ச் 26 மற்றும் 27ல் கலந்தாலோசனைக்கு (counselling) தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இதில் 1384 மருத்துவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. ஆனால் இது நியமனம் பெற்றவர்களின் ப்ட்டியல் இல்லை. கலந்தாய்விற்கான பட்டியல் தான். இந்த பட்டியல் பல்வேறு கட்டங்களாக ஜனவரி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்த கலந்தாய்வில் கடைசி 2 கட்டங்களுக்கான கலந்தாய்விற்காக அழைக்கப்பட்டவர்களின் பட்டியல். அப்போது ஏன் முஸ்லிம்கள் ஒருவர் கூட இந்த பட்டியலில் இல்லை என்றால் இந்த கடைசி 2 கட்ட கலந்தாய்வுக்கு முன்பாகவே முஸ்லிம் மருத்துவர்கள் 52 பேர் நாம் முன்பே குறிப்பிட்டது போல் நியமனம் செய்யப்பட்டு விட்டார்கள. இப்படி நாம் சொல்லும் போது இந்த 1384ல் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இல்லையா என்ற கேள்வி எழும். இந்த 1384 பேரையும் சேர்த்து கலந்தாய்வுக்காக 5856 மருத்துவர்கள் அழைக்கப்பட்டார்கள். இவர்களில் 1963 மருத்துவர்கள் மட்டுமே 2012 ஜனவரி 20, 21, 22. 23 மற்றும் மார்ச் 22, 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வில் பங்குக் கொண்டார்கள். இவர்களில் கலந்தாய்வுக்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட 835 இடங்களுக்கு 688 பேர் நியமனம் செய்யப்பட்டார்கள் என்பதை மருத்துவத் துறை நமக்கு விரிவாக பட்டியலை அளித்துள்ளது. அந்த பட்டியலின் சுருக்கும் இதோ

 

 

688 மருத்துவர்களில் திறந்த போட்டியில் 28 பேர் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5 இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 பேர் ஆக மொத்தம் 52 முஸ்லிம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் விபரம் வருமாறு

1. சமீமா 2. சைய்யது அப்துல் காதர் 3. அஹ்மது ஷேக் 4.ஜின்னா 5. எஸ்.எம். இம்தியாஸ் 6.எஸ. நர்கீஸ் 7. எஸ். சையது பாகர் 8.ஆர். மன்சூரா சாஹிபா 9. ஏ. உஸ்மான் 10.முஹம்மது மீரான் 11. ஏ. கதீஜா சமீஹா 12. பி. சமீமா 13. ஏ. அர்ஷியா தபசும் 14.ஏ. ஆரிப் உதுமான் முகைதீன் 15. எம் ஆசிக் அல் முஹம்மது 16.நிலோபர் நிஷா 17.எஸ். அலிமா பானு 18.ஏ. அஸ்கர் அலி 19.பி. சாகுல் ஹமீத 20.எம். சபீனா 21.ஏ. மரிஜியா 22.ஷேக் முஹம்மது ராஜா 23. ஏ. சலீம் 24. ஆர். முஹம்மது ஹில்மி 25. சைய்யது அப்துல்லா முஹம்மது அமீன் 26. சைய்யது நிஷான் பாத்திமா 27. பி.ஐ. சாஜித் அலி 28.எம். பைரோஸ் 29.எம. முஹம்மது இப்ராஹீம் 30.எம.ஜி. ஷாஹித் அப்துல்லா 31. சாஜிதா நஸ்ரின் 32.அஜ்மல் கான் 33. ரியாஸ் சுல்தானா 34. எப். முஹம்மது ரபி 35.எஸ். பகிருத்தீன் ஆரிப் கான் 36. எ. அபுல் ஹசன் 37. முனவர் அலி மித்ஹத் ஹப்சா 38.எம். மஜிதா பேகம் 39. டி.ஏ. ரிஸ்வான் அஹ்மது 40.ஹெச். சாஜிதா பர்வீன் 41. எ. நசுரீன் 42.எஸ். தய்யுபா பாத்திமா 43. ஜே.ஏ.எம்.சையத் இப்ராஹீம் ஷா 44.எஸ்.ஐ. சாஹித் அக்பர் 45.ஆர். பர்கத் 46. கே. ரியாஸ் பாத்திமா 47.ஏ. சுல்தான ராஜா 48. ஏ. ஆசிபா பேகம் 49. ஏ. பர்கத் நிஷா 50. எ. அப்துல் ரஹீம் 51. எல். சப்னம் 52. அஹ்மது பாசில்

 

ஜனவரி 2 2012ல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எம்.எஸ். 2ன் படி 835 மருத்துவர்கள் நியமனம் செய்யயப்பட வேண்டும். இதில் மேற்கண்டவாறு 688 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். 147 பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு எவ்வாறு பின்பற்றப்படுகின்றது என்பதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறற்றக் கழகம் தொடர்ந்து கண்காணித்து வரும். இதில் துரோகம் இழைக்க அனுமதிக்க மாட்டோம். ஆனால் ஆய்வுச் செய்யாமல் மலிவான விளம்பரத்தில் ஈடுபட மாட்டோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும்.

 



--
------~~~----------~~~----------~~~--------------~~~----------------~~~----------~~~--------------
இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது,
தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم
 
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்'
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

------~~~----------~~~----------~~~--------------~~~----------------~~~----------~~~--------------

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது." group.
To post to this group, send email to tmmk@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmmk+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmmk?hl=ta.



--
*more articles click*
www.sahabudeen.com



No comments: