Wednesday, June 20, 2012

என்னா மீட்டிங்கு.......

என்னா மீட்டிங்கு.......

 

இந்த மீட்டிங்கு இருக்கு பாருங்க மீட்டிங்கு..........அதாங்க நம்ம ஆப்பீசுகள்ல போடுவாய்ங்களே மீட்டிங்கு அதைத்தான் சொல்றேன்......ஆபீஸ்ல சில நாதாரிங்க சும்மாவே கலக்டர் மாதிரி பில்டப் கொடுத்திட்டிருப்பானுங்க, மீட்டிங் வேற வந்துட்டாபோதும் அவ்ளோதான் கெவர்னர் ரேஞ்சுக்கு ஆகிடுவானுங்க......  சம்பந்தமே இல்லாம கைய கால ஆட்டி பேசுறது, வானத்த வளைக்கிறேன், பூமிய சுத்த வெக்கிறேன்னு சலம்புறது. அவனுக மட்டும் இல்லேன்னா கம்பேனிய இன்னேரம் காக்கா தூக்கிட்டு போயிருக்கும்னு அலப்பறை பண்றதுன்னு நல்லா எண்டர்டெயின் பண்ணுவானுங்க. பாசும் எதையுமே கண்டுக்காம காப்பிய சப்பி சப்பி குடிச்சிக்கிட்டு ஜாலியா ஐபேடை நோண்டிக்கிட்டு இருப்பாரு. 

 

சில நேரங்கள்ல பேச ஒரு எழவுமே இருக்காது ஆனா மீட்டிங் போட்ருவானுங்க.... எப்படியோ மீட்டிங்கு நடந்து முடியும். மினிட்ஸ் ஆஃப் மீட்டிங்குன்னு 15 பக்கத்துக்கு என்னத்தையோ அடிச்சிக்கிட்டும் வருவானுங்க. நாம இடைல போனா போவுதுன்னு ரெண்டே ரெண்டு வார்த்த பேசி இருப்போம், கரெக்ட்டா அதை மட்டும் விட்டுட்டு மினிட்ஸ் ரெடி பண்ணி இருப்பானுங்க. அப்புறம் அதை கரெக்ட் பண்றதுக்குள்ள அடுத்த மீட்டிங்கே வந்துடும்....

 

அப்புறம் பாருங்க, மீட்டிங்ல பார்த்து திடீர்னு சில பேருக்கு கொம்பு மொளச்சிக்கும். அதுக்கு முன்னாடி வரைக்கும் நம்ம கூட உக்காந்து ஓசி டீ அடிச்சிட்டு அண்ணே ஆபீஸ்லயே நீங்கதாண்ணே ரொம்ப நல்லவரு வல்லவருன்னு பிட்ட போட்டுக்கிட்டு இருப்பானுங்க. நாமலும் ஆஹா நமக்கும் ஒரு அல்லக்கை சிக்கிட்டான்டான்னு குளுந்து போய் மீட்டிங்குக்கு வருவோம். ங்கொக்காமக்கா மீட்டிங் தொடங்குனதும் அவனுக ஃபர்ஸ்ட் குறியே நாமளாத்தான் இருக்கும், இவருனாலதாங்க அந்த பஸ் ஓடலை, இந்த ரயில் ஓடலைன்னு பக்காவா மனப்பாடம் பண்ணி வெச்சி பிரிச்சி மேஞ்சி நம்மளை கப்பலேத்திருவாய்ங்க. அதுக்கு பதில் சொல்றதுக்குள்ள காலைல குடிச்ச கஞ்சியெல்லாம் காலியாகிடும்.......

 

சரி அத விடுங்க, ஆபீஸ்ல பாவம் போல இருப்பானுங்க சில பேரு, அவனுங்களும் மீட்டிங்குன்னு வந்துட்டா மட்டும் சலங்க கட்டி ஆடுவானுங்க...  எங்கேருந்துதான் கெளம்புவானுங்களோ? ஒரு ஆட்டம் ஆடித்தான் நிப்பானுங்க. எல்லாம் முடிஞ்சதும் வழக்கம் போல மாட்டை தொழுவத்துல கட்டுன மாதிரி போய் உக்காந்துடுவானுங்க, இனி அடுத்த மீட்டிங் வரைக்கும் நம்மாளு கெணத்துல விழுந்த கல்லுதான்.......

 

இன்னும் சில பேரு இருப்பானுங்க, யாருன்னே யாருக்கும் தெரியாது. சும்மா வந்து உக்கார்ந்து எதையோ முறைச்சி பார்த்துட்டே இருப்பானுங்க, மேலேயும் கீழேயும் பாத்துட்டு என்னமோ பரிட்சை எழுதுற மாதிரி விறுவிறுப்பா எழுதுவானுங்க. காப்பி வந்ததும் காப்பி சாப்புடுவானுங்க, மீட்டிங் முடிஞ்சதும் அப்படியே எந்திரிச்சி போய்டுவானுங்க. எதுக்கு மீட்டிங் வந்தானுங்க, என்ன பண்றானுங்க எல்லாம் படு சீக்ரெட்டா இருக்கும்...... அது யாருன்னு கேட்கவே எல்லாரும் பயப்படுவானுங்க..

 

இப்படி எல்லாரும் என்னத்தையாவது பேசி முடிச்ச உடனே பாஸ் வாய தொறப்பாரு. ஏற்கனவே அவரு அவர் பாசோட பேசி எடுத்த எல்லா முடிவையும் வரிசையா சொல்லுவாரு, சொல்லிட்டு பெருமையா(?)   ஒரு பார்வை வேற பார்ப்பாரு... ங்கொக்காமக்கா அதான் முடிவு பண்ணிட்டீங்கள்ல அப்புறம் என்ன கருமத்துக்குய்யா மீட்டிங்க கூட்டி ரணகளம் பண்றீங்க? பாஸ் சொன்னதைக் கேட்டது ஆடுனவன்லாம் பொட்டிப்பாம்பா அடங்கிருவானுங்க. எஸ்சார், அப்படியே பண்ணிடலாம் சார், முடிச்சிடலாம் சார்னு கோசம் போடுவானுங்க.  தலைவரும் உடனே கேனத்தனமா ஒரு இளிப்பு இளிச்சிக்கிட்டே ஓகே, எனக்கு இன்னொரு அர்ஜெண்ட் மீட்டிங் இருக்கு, அப்புறம் பேசுவோம் அதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சி வைங்கன்னு ஆர்டர் போட்டுட்டு நைசா எஸ்கேப் ஆகிடுவாரு.... நம்ம திரும்ப நம்ம சீட்டுக்கு வந்து என்ன செய்ய சொன்னாருன்னு அவர் வர்ர வரைக்கும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க வேண்டியதுதான்.

முடியலடா சாமி, வாரா வாரம் மீட்டிங் போட்டுக் கொல்றாய்ங்க......... இந்தக் கருமத்தக் கண்டுப்புடிச்சவன் எவன்டா........ அவனுக்கு நான் எமன்டா.......


--
*more articles click*
www.sahabudeen.com



No comments: