இதுதான் அரபு நாட்டின் வாழ்கை!!!!!
அரபு நாட்டில் வேலை பார்தவர்களுக்கு இது சிரிப்பதற்கும், இப்போது வேலை பார்பவர்களுக்கு இது சிந்திப்பதற்கும், இனி அரபு நாட்டில் வர விரும்புகிறவர்களுக்கு உண்மை நிலை புரிவதற்கும்.அரபு நாடு என்றால் இப்படி தான் எல்லாம்
1.இங்கே, பெட்ரோலுக்கு குடிக்கிற தண்ணீரை விட விலை குறைவு
2.பல வாரங்களுக்குள்ளில் பெரிய கட்டிடங்கள் கட்டி முடிக்க படும்
3.படிப்பு இல்லாதவங்களுக்கு, படித்தவர்களை விட அதிக சம்பளம்.
4.உண்மையானதிறமை இருந்தாலும் ஜால்ரா அடிக்கிரவங்களுக்குதான் முக்கியத்துவம் வழங்கப்படும்
5.கம்பனிகளுக்கு, வேலையாட்களை பிடிக்கா விட்டால் எந்த
காரணமும் இல்லாமல் வேலையை விட்டு தூக்கலாம்
6.சிபாரிசு இருந்தால் எந்த ஒரு அடி முட்டாளுக்கும் பெரிய பதவிகள் கிடைக்கும்
7.கம்பெனி முதலாளியிடம், அலுவலக அதிகாரிகளை விட டீ பாய்கும், டிரைவருக்கும்தான் உறவு அதிகமாக இருக்கும்
8.கட்டிடங்களுக்கு அதன் உடமஸ்தனை விட, அதன்
காவல்காரனுக்கு அதிகாரம் அதிகமாக இருக்கும்
9.அரபிகளின் மனசும், அரபு தேசத்தின் சீதோஷ்ணநிலையும் நமக்கு புரியாது. எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்.
10.பாலைவனமாக இருந்தாலும்,எல்லா இடமும் பச்சைபசேலென இருக்கும்
11.நேரம் சீக்கிரமாக போகும், ஒரு வெள்ளிகிழமையிலிருந்து அடுத்த வெள்ளிக்கிழமைக்கு உள்ள தூரம் ரொம்ப குறைவாக நமக்கு தோன்றும்
12.எந்த ஒரு கல்யாணம் பண்ணாத வாலிபனின் கனவு, சொந்த மண்ணில் போகும் விடுமுறையும், அவன் திருமணமும் என்றால்.திருமணம் ஆனவர்களின் கனவு பாமிலி விசாவும், அதன் பிறகு வரும் சிலவுகளும்.
13.நமக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை கடைவியாபாரிகள் அவர்களுடைய வாகனத்திலேயே நாம் இருக்கும் இடத்தில் கொண்டு தருவார்கள்
14.ஒவ்வொரு 5 கிலோமீட்டர் தூரத்திற்கும் ஷாப்பிங்மால் இருக்கும்.
15.நம் நாட்டின் சாலையின் நீளமும், இங்குள்ள சாலையின் வீதியும் சமமாக இருக்கும்.
16.போக்குவரத்து சிக்னல்கள் பச்சை நிறம் வரும்போது அது இந்தியா காரனுக்கும், பெங்கால் காரனுக்கும் போவதற்கு, மஞ்சள் நிறம் வரும்போது எகிப்து காரனுக்கும்,பாகிஸ்தான் காரனுக்கும் போவதற்கு, சிகப்பு நிறம் வரும்போது அரபிகளுக்கு போவதற்காக இருக்கும்.
17.இந்தியாவுக்கு போன் பண்ண பணம் செலவு ஆவதை விட அரபு நாட்டிற்க்குள்ளேயே போன் பண்ண கூடுதல் செலவு.
Nanri Maami
By: Raja Mohamed
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment