Sunday, November 11, 2012

துணியை சுடு ததண்ணீரில் அலசினால் என்ன ஏற்படும்…?


பொதுவாக அனைவரும் துணியை துவைப்பது என்றால் நீரில் அலசி, பின் சோப்பு நீரில் ஊற வைத்து, பிறகு நல்ல தண்ணீரில் அலசுவோம். ஆனால் கரையானது நன்கு போக வேண்டுமென்றால் சுடு தண்ணீரில் ஊற வைத்து அலசுவோம். இதனால் துணியில் கரை மட்டும் செல்வதில்லை துணியின் தரமும் தான் பாதிக்கப்படுகிறது. ஆகவே துணிகளை சுடு ததண்ணீரில் அலசும் போது பார்த்து அலச வேண்டும்.
1. துணி சுருக்கிவிடும் : துணிகளை லான்டரியில் போடுகிறோம், அங்கு துணிகளில் உள்ள கரைகள் நீங்க சுடு தண்ணீரை பயன்படுத்துகிறார்கள், அதனால் துணிகளானது கரை இல்லாமல் பளிச்சென்று இருக்கிறது. ஆனால் அந்த துணிகளைப் போட்டு பார்த்தால் இறுக்கமாக இருக்கும். அப்போது நீங்கள் குண்டாகிவிட்டீர்கள் என்று நினைப்பீர்கள், ஆனால் உண்மையில் துணியானது சுருங்கி இருக்கும். ஏனெனில் சுடு நீரானது துணியின் மெட்டீரியலை பாதிக்கும்.
2. நிறம் மங்குதல் : சுடு நீரானது துணியின் கலரை நீக்கும் சக்தியுடையது. ஏனெனில் சுடு தண்ணீரில் உள்ள வெப்பத்தின் அளவானது துணியில் உள்ள நிறத்தை அகற்றிவிடும்.
3. நூல் நஞ்சிவிடுதல் : சுடு நீரில் அலசும் துணி சுருங்குவதால், துணியில் உள்ள நூல்கள் வலுவிழந்து நஞ்சிவிடுகிறது. மேலும் சுடு தண்ணீரில் ஊற வைத்து துவைக்கும் துணியில் அழுக்கை போக்க பிரஸ் போட்டால் கண்டிப்பாக துணியானது கிழிந்து விடும்.
நினைவில் கொள்ள வேண்டியவை
1. துணியை வாங்கும் போது அதில் துணியைப் பற்றி லேபிளில் போட்டிருப்பதை படிக்க வேண்டும். முக்கியமாக துணியை சுடு நீரில் அலசலாமா, வேண்டாமா என்று பார்ப்ப வேண்டும். காட்டனை சுடு தண்ணீரில் அலசலாம், ஆனால் லேபிளில் கொடுத்திருப்பதையும் பார்க்க வேண்டும்.
2. வேண்டுமென்றால் துணியின் சிறு பகுதியை சுடு நீரில் 4 5 நிமிடம் வரை ஊற வைத்து, சுருங்கியிருந்தாலோ அல்லது நிறம் போனாலோ அந்த துணியை சுடு நீரில் போட வேண்டாம். இதனால் துணியை சுடு நீரில் போடலாமா வேண்டாமா என்று தெரிந்து விடும்.
3. பொதுவாக துணிகளை 10 15 நிமிடத்திற்கு மேல் சுடு தண்ணீரில் ஊற வைக்க வேண்டாம். இதனால் எந்த துணியானாலும் சுருக்கத்தை அடையும்.
4. சுடு நீரில் அலச இருக்கும் துணியை வெதுவெதுப்பான தண்ணீரில் அலசினால் துணியானது விரைவில் பாதிப்படைவதைத் தடுக்கலாம்.
துணிகள் நீண்ட நாட்கள் வர வேண்டும் என்று நினைத்தால், சுடு நீரில் பெரும்பாலும் அலசுவதை தவிர்க்கவும். கரைகள் போக சுடு நீரில் போடுவதற்கு பதில் மற்ற பொருட்களான எலுமிச்சை, பேக்கிங் சோடா அல்லது வினிகரை பயன்படுத்தலாம்.

No comments: