கருத்தரிக்கும் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கூட பயணம் செய்யலாம். ஆனால் பிரசவத்திற்கு பிறகு செய்ய வேண்டிய போது தான் கவனமாக இருக்க வேண்டும் என்பர். ஏனெனில் அது தாயின் உடலுக்கு ஆபத்தையே ஏற்படுத்திவிடும். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது முதல் ஆறு மாதத்திற்கு பயணம் செய்யலாம், ஆனால் பிரசவத்திற்கு பிறகு உடனே செய்வதில் தான் பிரச்சனை அதிகம் வரும். அப்படி கட்டாயமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ப்ளான் செய்ய வேண்டும். அவ்வாறு பயணிப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை என்னென்னவென்று பார்ப்போமா!!!
1. சிசேரியன் டெலிவரி? : இத்தகைய டெலிவரி செய்தவர்கள் நன்கு ஓய்வு எடுக்க வேண்டும். அவர்கள் கண்டிப்பாக ஒரு மாதத்திற்கு எந்த ஒரு பயணமும் மேற்கொள்ளக் கூடாது. ஏனெனில் சிசேரியன் டெலிவரி செய்தவர்களுக்கு போடப்பட்டிருக்கும் தையல்கள் புதிதாக, எந்த ஒரு கிருமியும் அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தாய்க்குத் தான் தேவையில்லாத நோய் தாக்கும், பின் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
2. குழந்தை பிறந்ததும் ஏதேனும் உறவினர் வீட்டிற்கு அரை மைல் தூரம் குழந்தையுடன் செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும். எப்படியென்றால் இந்த நேரத்தில் இரண்டு வாரமாவது கண்டிப்பாக ஓய்வு இருக்க வேண்டும். அப்போது தான் அந்த தையல்கள் சற்று காய்ந்து இருக்கும். ஆனால் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் கடல் தாண்டி பயணம் மேற்கொள்ள நேர்ந்தால் பின் பெரும் சிரமத்திற்கு ஆளாவீர்கள்.
3. விமானத்தில் செல்ல வேண்டிய நிலை வந்தால் சிசேரியன் ஆனவர்கள் குறைந்தது ஓரு மாதமாவது ஓய்வு எடுத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் உடலானது மறுபடியும் பழைய சக்தியை அடையும். சுகப்பிரசவம் ஆனவர்களுக்கு ஒரு வாரத்தில் குணமாகிவிடும். அவர்களுக்கு பஸ்சில் செல்வது நல்லது, அதுவும் குறைந்த தூரப் பயணங்களுக்கே. பிரசவம் ஆனதும் எப்போதும் எடுத்ததும் நீண்ட தூரப்பயணங்களை செய்யக் கூடாது. அதிலும் எப்போதும் ரயிலில் செல்வதே இருவகையான பிரசவங்களுக்கும் நல்லது.
4. சுகப்பிரசவம் ஆனவர்களுக்கு பயணம் செய்வதில் எந்த ஒரு சிக்கலும் ஏற்படாது. அவர்கள் ஒரு வாரத்திற்கு பிறகு பயணிக்கலாம். ஆனால் பிரசவத்தின் போது பிரச்சனை ஏற்பட்டவர்கள் அதாவது சிசேரியன் செய்தவர்கள் கண்டிப்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு எதையும் செய்ய வேண்டும்.
ஆகவே கர்ப்பமாக இருந்த போது கவனமாக இருந்த மாதிரி, பிரசவம் ஆன பின்னும் கவனமாக இருங்கள்.
No comments:
Post a Comment