தகவல் அறியும் சட்டத்தை எப்படி பின்பற்ற வேண்டும்?
நமக்குத்தேவையான தகவல் களைப் பெற தகவல் அறியும் சட்டத்தை எப்படி பின்பற்ற வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்ன?
எந்தத் துறை சம்பந்தப் பட்ட தகவல்கள் உங்களுக்குத் தேவையோ, அந்தத் துறையின் பப்ளிக் இன்ஃபர்மேஷன் அலுவலருக்கு, உங்களுக்குத் தேவையான தகவல்பற்றி கடிதம் எழுதவேண்டும். அப்படி எழுதும்போது உங்களைப் பற்றிய முழுதகவல் மற்றும் விலாசம் தெளிவாக இடம்பெறவேண்டும்.
உங்களுக்குத் தேவையான தகவலை தெளிவாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு பத்து ரூபாய் கட்டணத்தையும் அத்துடன் இணைத்துஅனுப்ப வேண்டும். கட்டணத்தை டிடியாகவோ பேங்கர்ஸ் செக்காகவோ அனுப்பலாம்.
உங்களுக்குத் தேவைப்படும் தகவல் ஒரு பக்கத்துக்கு மிகுந்தால், அதிகப்படியான பக்கங்கள் ஒவ்வொன்றிற்கும் இரண்டு ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். நீங்கள் கேட்கும் தகவலின் தன்மையைப் பொறுத்து, அதற்குத் தேவையான கட்டணத்தை நீங்கள் முன்கூட்டியே அனுப்புவது நல்லது.
அதற்குப் பின்னும் உங்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், ஸ்டேட் இன்ஃபர்மேஷன் கமிஷனுக்கு நீங்கள் புகார் செய்யலாம். அப்படி புகார் செய்யும்பொழுது அவர்களால் நீங்கள் கேட்கும் தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து பெற்றுத்தர முடியுமே தவிர, உங்கள் பிரச்னைகளைத் தீர்த்துவைக்க அவர்களை நீங்கள் நிர்ப்பந்திக்க முடியாது.
ஸ்டேட் இன்ஃபர்மேஷன் கமிஷனை நீங்கள் தொடர்புகொள்ள கீழ்கண்ட முகவரி மற்றும் இணைய தளத்தைப் பயன்படுத்தலாம். விலாசம்: ஸ்டேட் இன்ஃபர்மேஷன் கமிஷன். காமதேனு சூப்பர் மார்க்கெட் பில்டிங். முதல் மாடி, தேனாம்பேட்டை சென்னை. போன் : 044 24357580, இணையதள முகவரி: www.tnsic.gov.in
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment